22ல் குறைவான விலை பென்ஸ் செடான் கார் விற்பனைக்கு வருகிறது!

Written By:

வரும் 22ந் தேதி மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய சிஎல்ஏ காம்பேக்ட் செடான் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

கடந்த ஆண்டு மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சிஎல்ஏ காரின் செயல்திறன் மிக்க மாடலான சிஎல்ஏ45 ஏஎம்ஜி காரை விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த மாடல் இந்திய வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது.

மேலும், முதல் லாட்டில் விற்பனை செய்யப்பட இருக்கும் அனைத்து கார்களுக்கும் முன்பதிவும் முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இதன் பேஸ் மாடலான சிஎல்ஏ காரையும் வரும் 22ந் தேதி முதல் இந்தியாவில் களமிறக்க உள்ளது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்.

 பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏ கிளாஸ், பி கிளாஸ் மற்றும் ஜிஎல்ஏ கிளாஸ் காம்பேக்ட் எஸ்யூவி மாடல்கள் உருவாக்கப்பட்ட அதே, எம்எஃப்ஏ பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய காரும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடல்

இந்த புதிய காம்பேக்ட் சொகுசு செடான் அறிமுகம் செய்யப்படும். பெட்ரோல் மாடலில் 181 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

டீசல்

டீசல்

டீசல் மாடலில் 135 பிஎச்பி பவரையும், 300என்எம் டார்க்கையும் வழங்கும் 2.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

இந்த எஞ்சின்களுடன் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் இணைந்து செயலாற்றும். ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் ஆப்ஷனலாக ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும் கிடைக்கும்.

விலை

விலை

ரூ.40 லட்சத்தையொட்டிய விலையில் இந்த புதிய காம்பேக்ட் சொகுசு செடான் கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
English summary
Now the ‘Three Pointed Star' would be offering its regular CLA-Class in India from 22nd of January, 2015. The vehicle is based on Mercedes-Benz's MFA platform, which has given birth to the A-Class, B-Class and the recently launched GLA-Class.
Story first published: Thursday, January 1, 2015, 11:50 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark