மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ சொகுசு காம்பேக்ட் செடான் இந்தியாவில் அசெம்பிள்!

Posted By:

ஆரம்ப நிலை சொகுசு மார்க்கெட்டில் சமீபத்திய வரவான, மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ சொகுசு காம்பேக்ட் செடான் காரின் உற்பத்தி இந்தியாவில் துவங்கப்படுகிறது.

இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் 7வது மெர்சிடிஸ் பென்ஸ் கார் மாடல் இதுவாகும். இதன்மூலம், சரியான விலையில் இந்த காரை வாங்குவதற்கான வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெறுவர்.

 புனே ஆலை

புனே ஆலை

மராட்டிய மாநிலம், புனே அருகிலுள்ள சகனில் இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆலையில், இந்த புதிய காரின் அசெம்பிள் செய்யும் பணிகள் துவங்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு மாடல்களும் புனே ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது.

இளம் வாடிக்கையாளர்கள்

இளம் வாடிக்கையாளர்கள்

இளைய வாடிக்கையாளர்களை கவரும் அடக்கமான வடிவம் கொண்ட இந்த சொகுசு செடான் கார் இந்தியாவிலேயே துவங்கப்பட்டிருப்பதால், சரியான விலையில் இந்த காரை வாங்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடல் ஒரு வேரியண்ட்டிலும், டீசல் மாடல் இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். பெட்ரோல் மாடலில் 181 பிஎச்பி பவரை வழங்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

டீசல் மாடல்

டீசல் மாடல்

டீசல் மாடலில் 135 பிஎச்பி பவரை வழங்கும் 2.2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக வந்துள்ளது.

புதிய மற்றும் பழைய விலை ஒப்பீடு

புதிய மற்றும் பழைய விலை ஒப்பீடு

புதிய விலை

சிஎல்ஏ CDI ஸ்டைல்: ரூ.30.70 லட்சம்

சிஎல்ஏ CDI ஸ்போர்ட்: ரூ.33.90 லட்சம்

சிஎல்ஏ பெட்ரோல் ஸ்போர்ட்: ரூ.32.90 லட்சம்

பழைய விலை

பென்ஸ் சிஎல்ஏ CDI ஸ்டைல்: ரூ.31.5 லட்சம்

பென்ஸ் சிஎல்ஏ CDI ஸ்போர்ட்: ரூ.35.9 லட்சம்

பென்ஸ் சிஎல்ஏ பெட்ரோல் ஸ்போர்ட்: ரூ.35.0 லட்சம்

போட்டியாளர்

போட்டியாளர்

போட்டியாளர் கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஆடி ஏ3 செடான் கார் மார்க்கெட்டை குறிவைத்து இந்த புதிய கார் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.

 

English summary
The CLA compact sedan by German luxury car maker is now manufactured locally at their Chakan, Pune facility. Both petrol and diesel options will be locally produced by Mercedes-Benz India.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark