சிஇஎஸ் கண்காட்சியில் கவனத்தை ஈர்த்த பென்ஸ் தானியங்கி கார்!

By Saravana

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் மின்னணு நுகர்வோர் கண்காட்சியில், அறிமுகம் செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் டிரைவரில்லாமல் இயங்கும் புதிய தானியங்கி காரின் மாதிரி மாடல் அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் பார்வையாளர்களுக்கு புதிர் போட்டு நிற்கும் இந்த கார் பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளை பயணிகளுக்கு வழங்கும்.


டிசைன்

டிசைன்

சிறப்பான ஏரோடைனமிக் தத்துவத்தின் அடிப்படையில் இந்த புதிய கார் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சாதாரண கார் மாடல்களிலிருந்து இது முற்றிலும் வேறுபட்ட டிசைன் கொண்டதாக இருக்கிறது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த காரில் 4 பேர் அமர்ந்து செல்லலாம். எதிரெதிர் திசைகளில் இரண்டு வரிசை இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கதவுகள் நடுவிலிருந்து பக்கவாட்டில் திறப்பதால், மிக எளிதாக பயணிகள் ஏறி இறங்க முடியும்.

டிஜிட்டல் டேஷ்போர்டு

டிஜிட்டல் டேஷ்போர்டு

மெர்சிடிஸ் பென்ஸ் எஃப்015 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த காரின் டிஜிட்டல் டேஷ்போர்டு மூலம் காரின் இயக்கம் உள்ளிட்ட பல முக்கிய தகவல்களையும், பொழுதுபோக்கு மற்றும் நேவிகேஷன் தகவல்களை பெற முடியும்.

ரம்மியமான பயணம்

ரம்மியமான பயணம்

இதுதவிர, காரின் பக்கவாட்டில் ஜன்னல்களில் டிஜிட்டல் திரை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் விரும்பிய வால் பேப்பரை தேர்வு செய்து வைத்து கொள்ள முடியும்.

 பென்ஸ் கார்களில்...

பென்ஸ் கார்களில்...

கேமராக்கள், சென்சார்கள், கம்ப்யூட்டர் மூலம் இயங்கும் இந்த புரோட்டோடைப் மாடலின் தானியங்கி கார் தொழில்நுட்பத்தை இன்னும் சில ஆண்டுகளில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் காண முடியும் என மீடியா தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதன் முழுமையான தானியங்கி கார் வடிவத்தை 2030ம் ஆண்டு வாக்கில் பார்க்க முடியும்.

Most Read Articles
English summary
The F 015 driverless car prototype – which the German automaker Mercedes Benz introduced with a splash Monday at the 2015 Consumer Electronics Show – is a vision of personal transportation from around the year 2030.
Story first published: Wednesday, January 7, 2015, 10:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X