அப்படியா... பென்ஸ் மல்டி ஆக்சில் எஸ்யூவி முழுவதும் விற்று தீர்ந்துவிட்டதாம்!

Written By:

மல்டி ஆக்சில் அவதாரம் எடுத்த பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி எஸ்யூவிகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வரவேற்பை பென்ஸ் நிறுவனமே எதிர்பார்க்கவில்லையாம்.

வரும் மே மாதம் இதன் கடைசி எஸ்யூவியை அதற்கு முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் எடுத்து செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் பிரபல ஆட்டோமொபைல் தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

சொகுசு எஸ்யூவி மாடல்

சொகுசு எஸ்யூவி மாடல்

கடந்த 2013ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி எஸ்யூவியின் மல்டி ஆக்ஸில் கொண்ட மாடல்தான் இது. 6 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

அடிப்படை மாடல்

அடிப்படை மாடல்

பென்ஸ் ஜி320 சிடிஐ மாடலின் அடிப்படையில் இந்த புதிய மல்டி ஆக்சில் எஸ்யூவியை பென்ஸ் தயாரித்து வெளியிட்டது. ஆனால், இந்த எஸ்யூவிக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று பென்ஸ் நிறுவனமே எதிர்பார்க்கவில்லையாம்.

உற்பத்தி

உற்பத்தி

ஆஸ்திரிய நாட்டில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஆலையில் இந்த மல்டி ஆக்சில் எஸ்யூவி உற்பத்தி செய்யப்படுகிறது. வரும் மே மாதத்தில் கடைசி எஸ்யூவியை முன்பதிவு செய்திருக்கும் வாடிக்கையாளர் டெலிவிரி எடுத்துச் செல்ல இருக்கிறாராம்.

விற்பனை இலக்கு

விற்பனை இலக்கு

இதுவரை 100க்கும் மேற்பட்ட மல்டி ஆக்சில் ஜி63 ஏஎம்ஜி எஸ்யூவிக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். இதற்கு மேலும் வாங்குவதற்கு வாடிகக்கையாளர்கள் ஆர்வமுடன் விருப்பம் தெரிவித்துள்ளனராம். ஆனால், இதன் பிரத்யேத்தன்மையை மனதில் வைத்து, உற்பத்திக்கு வரையறை நிர்ணயித்துவிட்டதாம் பென்ஸ் நிறுவனம்.

பிளாட்பார்ம்

பிளாட்பார்ம்

2011முதல் ஆஸ்திரேலிய ராணுவத்தில் பயன்பாட்டில் இருந்து வரும் 6 சக்கரங்கள் கொண்ட ஜி வேகன் பிளாட்பார்மில்தான் இந்த மல்டி ஆக்ஸில் பிக்கப் டிரக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த எஸ்யூவியில் 5.5 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவியில் பொருத்தப்பட்டிருக்கும் வி8 எஞ்சின் 536 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த எஸ்யூவியில் 7 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.

எடை

எடை

இந்த எஸ்யூவி 3775 கிலோ எடை கொண்டது. இந்த எஸ்யூவியின் கிரவுண்ட் கிளியரன்ஸ் மிக முக்கியமான அம்சம். ஆம், இந்த எஸ்யூவி 460 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

ஆடம்பர ரகத்தை இந்த எஸ்யூவியில் கேபினில் 4 பேர் அமர்ந்து செல்ல முடியும். பின்புறம் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான பக்கெட் பொருத்தப்பட்டுள்ளது.

சக்கரங்கள்

சக்கரங்கள்

இந்த எஸ்யூவியில் 37 இஞ்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விலை

விலை

மெர்சிடிஸ் பென்ஸ் தயாரிப்புகளில் இரண்டாவது அதிக விலை கொண்ட மாடல் இதுதான். 3.50 லட்சம் பவுண்ட் விலை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 
English summary

 According to the medeia reports, Mercedes is finished building one its most ridiculous projects to date, the G63 AMG 6×6. 
Story first published: Friday, February 20, 2015, 14:05 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark