மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஈ 450 ஏஎம்ஜி கூபே, ஜனவரி 12, 2016-ல் அறிமுகம்

Written By:

ஜிஎல்ஈ 450 ஏஎம்ஜி கூபே மாடலை, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஜனவரி 12-ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.

இந்தியாவின் சொகுசு வாகன சந்தை மிகுந்த சந்தை மதிப்புடன் விரிவடைந்து கொண்டே இருக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், அடுத்த இந்தியாவில் செய்ய உள்ள இந்த புதிய அறிமுகம் குறித்த தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

அறிமுகபடுத்தபடும் விதம்;

அறிமுகபடுத்தபடும் விதம்;

ஆரம்பகட்டத்தில், இந்த ஜிஎல்ஈ 450 ஏஎம்ஜி கூபே மாடலை தான், மெர்சிடிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த பெர்ஃபார்மன்ஸ் எஸ்யூவி கூபே சிபூயூ எனப்படும் (கம்ப்ளீட்லீ பில்ட் யூனிட்) முழுவதுமாக கட்டி முடிக்கபட்ட காராக தான் அறிமுகமாக உள்ளது.அனைத்து, ஏஎம்ஜி மாடல் கார்களும் இந்திய சந்தைகளுக்கு இறக்குமதி செய்யபடுகிறது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஈ 450 ஏஎம்ஜி கூபே, 3.0 லிட்டர், வி6, பை-டர்போ பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இது 357 பிஹெச்பி-யையும், 520 என் எம் டார்க்கையும் வெளிபடுத்தும் வகையில், இதனை ஏஎம்ஜி இஞ்ஜினியர்கள் வடிவமைத்துள்ளனர்.

டிரான்ஸ்மிஷன்;

டிரான்ஸ்மிஷன்;

இந்த ஜிஎல்ஈ 450 ஏஎம்ஜி, 4மேட்டிக் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டுள்ளது. இது 9-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

இண்டீரியர்;

இண்டீரியர்;

ஜிஎல்ஈ 450 ஏஎம்ஜி காரின் இண்டீரியர் (உட்புற அமைப்பு), வழக்கமான ஜிஎல்ஈ மாடல்களை போலவே இருக்கும்.

சிறப்பு அங்கீகாரத்தை தக்க வைத்து கொள்ள, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்த வாகனத்தை ஏஎம்ஜி பேட்ஜுடன் வழங்க உள்ளது. ஏஎம்ஜி பெர்ஃபார்மன்ஸுக்கு ஏற்றவாறு, இதன் எக்ஸ்டீரியரும் வடிவமைக்கபட்டுள்ளது.

அறிமுக தேதி;

அறிமுக தேதி;

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஈ 450 ஏஎம்ஜி கூபே, ஜனவரி 12, 2016-ஆம் தேதி அறிமுகம் செய்யபட உள்ளது.

2016-ல் முதல் அறிமுகம்;

2016-ல் முதல் அறிமுகம்;

ஜெர்மானிய கார் உற்பத்தியாளரால், 2016-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யபட உள்ள முதல் காராக ஜிஎல்ஈ 450 ஏஎம்ஜி கூபே தான் விளங்க உள்ளது.

சமீபத்தில் தான், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தங்களின் அனைத்து எம்எல்-கிளாஸ் மாடல்களையும், ஜிஎல்ஈ என ரீ-பேட்ஜிங் செய்தது.

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

English summary
Mercedes-Benz India has decided to launch their all-new GLE Coupe model on January 12, 2016. The GLE Coupe is the first model, that is to be introduced in 2016 by this German manufacturer. Mercedes-Benz has just recently rebadged all their ML-Class models as the GLE worldwide.
Story first published: Tuesday, December 29, 2015, 14:20 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark