பெங்களூர், கோரமங்களாவில் புதிய பென்ஸ் கார் ஷோரூம் திறப்பு!

Written By:

பெங்களூரின் முக்கிய வர்த்தக பகுதியாக திகழும் கோரமங்களாவில் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார் நிறுவனத்தின் புதிய ஷோரூம் இன்று திறக்கப்பட்டது.

இந்தியாவில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ். இதற்காக, ஷோரூம் கட்டமைப்பை வலுவாக்கிக் கொண்டு வருகிறது.

Benz Showroom
 

அந்த வகையில், இப்போது பெங்களூரிப் மேலும் ஒரு புதிய ஷோரூமை அந்த நிறுவனம் திறந்திருக்கிறது. இன்று நடந்த இந்த ஷோரூம் திறப்பு விழாவில், மெர்சிடிஸ் ன்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் எபர்ஹார்டு கெர்ன் கலந்து கொண்டார்.

Benz Car
  

பெங்களூரில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலராக செயல்படும் அக்ஷயா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஷோரூமை அமைத்துள்ளது. இந்த புதிய ஷோரூம் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு மிக நெருங்கிய சேவையை அளிக்க முடியும் என்று மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய கார் ஷோரூம் 107/3, 80 அடி சாலை, 4வது பிளாக், கோரமங்களா என்ற முகவரியில் இயங்குகிறது.

English summary
Mercedes-Benz have inaugurated a new showroom in Bangalore, to strengthen their presence in South India. Eberhard Kern, the MD & CEO of Mercedes-Benz India was present to inaugurate the new world class Akshaya Motors dealership.
Story first published: Wednesday, June 17, 2015, 17:27 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark