ஆடிக்கு போட்டியாக எஸ்டேட் வேகனை அறிமுகப்படுத்தும் பென்ஸ்!

Written By:

ஆடிக்கு போட்டியாக புதிய எஸ்டேட் வேகன் மாடலை அறிமுகப்படுத்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

சொகுசு கார் மார்க்கெட்டில் முதல் இடத்திற்காக ஆடி மற்றும் பென்ஸ் கார் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தநிலையில், முதல்முறையாக ஆர்எஸ்6 அவான்த் என்ற புதிய எஸ்டேட் வேகன் மாடலை ஆடி நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது.

Benz Estate Wagon
 

இந்தநிலையில், ஆடியை தொடர்ந்து மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் புதிய எஸ்டேட் வேகன் மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது, விற்பனை ஆகிறதோ இல்லையோ, ஒவ்வொரு செக்மென்ட்டிலும் கார் மாடல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பென்ஸ் செயல்பட்டு வருகிறது.

மேலும், தனது இ கிளாஸ் அல்லது சி கிளாஸ் கார்களின் எஸ்டேட் வேகன் மாடலில் ஒன்றை இந்தியாவில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

English summary
Audi, BMW and Mercedes-Benz are constantly battling for supremacy in India. Now the ‘Three Pointed Star' is also thinking of bringing a couple of estate wagons to India for the very first time.
Story first published: Saturday, June 20, 2015, 10:33 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark