நடப்பு ஆண்டில் 15 புதிய கார் ஷோரூம்களை திறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்

Written By:

நடப்பு ஆண்டில் 15 புதிய கார் ஷோரூம்களை திறப்பதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

சொகுசு கார் மார்க்கெட்டில், ஆடி, பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனங்களுக்கு இடையில் கடும் வர்த்தக போட்டி நிலவுகிறது.

 

இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் விதத்திலும், வர்த்தகத்தில் முன்னிலை பெறுவதற்கும் டீலர் கட்டமைப்பை விரிவாக்கம் செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டிருக்கிறது.

இதற்காக, நடப்பு ஆண்டில் மட்டும் 15 புதிய கார் ஷோரூம்களை அந்த நிறுவனம் திறக்க உள்ளது. குறிப்பாக, வடகிழக்கு பிராந்தியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்திருக்கிறது. சமீபத்தில் ஜாம்ஷெட்பூரில் புதிய கார் ஷோரூமை திறந்த அந்த நிறுவனம் தொடர்ந்து ஷோரூம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

தற்போது 38 நகரங்களில் 69 டீலர்ஷிப்புகளை மெர்சிடிஸ் பென்ஸ் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 80ஐ தாண்டும் என தெரிகிறது.

English summary
Now the German manufacturer has decided to introduce 15 new dealerships in India through 2015. Their focus will be on introducing exclusive dealerships in the Eastern part of India. They will be inaugurating showrooms in tier 2 and tier 3 cities as well for better reach to its clientele.
Story first published: Monday, February 9, 2015, 12:08 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark