இந்தியாவில் அறிமுகமாகிறது மெர்சிடிஸ் - மேபக் பிராண்டின் ஆடம்பர கார்!!

Written By:

மெர்சிடிஸ்- மேபக் எஸ்600 ஆடம்பர கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சமீபத்தில், மெர்சிடிஸ்- மேபக் எஸ்600 கார் ஒன்று ஆய்வுகளுக்காக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் தகவல் மூலம் இது உறுதியாகியுள்ளது.

உலகின் மிகவும் ஆடம்பரமான இந்த புதிய கார் மாடல் இந்தியா வர இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் கோடீஸ்வரர்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

லிமோசின் ரகம்

லிமோசின் ரகம்

பென்ஸ் எஸ் கிளாஸ் சொகுசு காரின் நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் கொண்ட மாடல் இது. எஸ் கிளாஸ் காரைவிட மெர்சிடிஸ் - மேபக் எஸ் 600 காரின் வீல்பேஸ் 200 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. இது லிமோசின் ரகத்திலான மாடலாக குறிப்பிடப்படுகிறது. எனவே, இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்போது, பெரும் பணக்காரர்களின் கார் கராஜில் இடம்பிடித்துவிடும் வாய்ப்புள்ளது.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

இந்த ஆடம்பர காரில் 533 எச்பி பவரையும், 830என்எம் டார்க்கையும் வழங்கும் 6.0லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது. மணிக்கு 259 கிமீ வேகம் வரை செல்லக்கூடியது.

இன்டிரியர்

இன்டிரியர்

ஏராளமான நவீன தொழில்நுட்ப வசதிகள், உயர்தரமான இன்டிரியர் பாகங்கள், சொகுசான இருக்கைகள் என ஆடம்பர கார்களுக்கு உரிய அனைத்து பண்புகளையும் இந்த கார் கொண்டுள்ளது. பொழுதுபோக்கு வசதிகளுக்கும் பஞ்சமிருக்காது.

நிசப்தமான கேபின்

நிசப்தமான கேபின்

இதுவரை தயாரிக்கப்பட்ட மாடல்களில் கேபின் சப்தம் மிக குறைவான மாடலாக இதனை மெர்சிடிஸ் பென்ஸ் குறிப்பிடுகிறது. பின்புறத்தில் பயணிகளுக்கு தனித்தனி இருக்கைகள் இருக்கும்.

விற்பனை

விற்பனை

இந்த ஆண்டில் 15 புதிய கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டிருக்கிறது. அதில், 10 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன. எனவே, அடுத்ததாக இந்த காரை விற்பனைக்கு கொண்டு வரும் வாய்ப்புகள் அதிகமிருக்கிறது.

 
English summary
The German manufacturer Mercedes Benz has now imported its Maybach S600 model in India recently. It is most likely to introduce the Maybach premium brand in India as their next launch.
Story first published: Friday, August 14, 2015, 11:05 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark