55 பென்ஸ் இ க்ளாஸ் கார்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் பல்க் ஆர்டர்!

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு விருந்தினர்களாக வரும் தலைவர்கள் மற்றும் அரசுத் துறை பிரதிநிதிகளின் பயன்பாட்டிற்காக, 55 மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் கார்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆர்டர் செய்துள்ளது. இந்த கார்களை குத்தகை [Lease] திட்டத்தின் கீழ் பெற்று பயன்படுத்துவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அடுத்த வாரம் டெல்லியில் நடைபெற இருக்கும் இந்திய- ஆப்பிரிக்க உச்சி மாநாட்டுக்கு வரும் ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்கள் மற்றும் அரசு பிரதிநிதிகளின் அழைத்துச் செல்வதற்காக முதல்முறையாக இந்த கார்கள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இந்த பல்க் ஆர்டர் கிடைத்திருப்பது குறித்து மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரோலண்ட் போல்ஜர் கூறியிருப்பதாவது, "இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் அரசுத் துறையினரின் அபிமானத்தை மெர்சிடிஸ் பென்ஸ் தயாரிப்புகள் பெற்றிருக்கின்றன. சொகுசு, பாதுகாப்பு, அந்தஸ்து என அனைத்து விதத்திலும், வாடிக்கையாளர்களின் தேவையை எங்களது தயாரிப்புகள் பூர்த்தி செய்து வருகின்றன. அதற்கு அத்தாட்சியாகவே இந்த ஆர்டரை பார்க்கிறோம்," என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 வரவேற்பு பெற்ற சொகுசு கார்

வரவேற்பு பெற்ற சொகுசு கார்

சொகுசு கார் வாங்குபவர்கள் மத்தியில் ஓர் சிறந்த தேர்வுக்கான மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் கார் விளங்குகிறது. உலக அளவில் 13 மில்லியன் கார்களும், இந்தியாவில் மட்டும் இதுவரை 30,000 கார்களும் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

 மாடல்

மாடல்

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரின் 250CDI மாடலைத்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆர்டர் செய்துள்ளது. இந்த காரில் இருக்கும் சிறப்பம்சங்களை தொடர்ந்து காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

வெளியுறவுத் துறை ஆர்டர் செய்திருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் காரின் 250CDI மாடலில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கறது. இந்த மாடலில் 7ஜி ட்ரோனிக் ப்ளஸ் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 201 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

செயல்திறன்

செயல்திறன்

மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காரின் 250CDI மாடல் 0- 100 கிமீ வேத்தை வெறும் 7.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 242 கிமீ வேகம் வரை எட்டிப்பிடிக்கும் வல்லமை கொண்டது.

 வசதிகள்

வசதிகள்

மிக தாராள இடவசதி, சொகுசான இருக்கைகள் கொண்ட இந்த காரில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், எலக்ட்ரிக் கன்ட்ரோல் சிஸ்டம் கொண்ட ஜன்னலுக்கான திரை சீலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. தவிர்த்து, இந்த காரில் 20.3 செமீ திரையுடன் கூடிய டெலிமேட்டிக்ஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கார்மின் பைலட் மேப் நேவிகேஷன் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

காருக்கு அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் பல பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளன. அதிக நிலைத்தன்மையுடன் செல்ல உதவும், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், வழுக்கும் தன்மையை குறைக்கும் ஸ்கிட் கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட் நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

விலை மதிப்பு

விலை மதிப்பு

மெர்சிடிஸ் பென்ஸ் இ-250 சிடிஐ கார் ரூ.50.70 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
English summary
Mercedes-Benz India has received an overwhelming order from the Ministry of External Affairs, Government of India. An order for 55 Mercedes E 250 CDI sedans has been placed. The Ministry will be leasing the vehicles from the luxury car maker.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X