400 கிமீ ரேஞ்ச் கொண்ட மிட்சுபிஷி எலக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட்!

Posted By:

டோக்கியோ மோட்டார் ஷோ இன்று துவங்கியிருக்கிறது. அதில், காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் 400 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்ட புதிய மிட்சுபிஷி எலக்ட்ரிக் எஸ்யூவி பெரிதும் கவர்ந்துள்ளது.

மிட்சுபிஷி eX என்ற பெயரில் இந்த புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கான்செப்ட் அழைக்கப்படுகிறது. அடுத்த தலைமுறை டிசைன் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்ட கான்செப்ட் மாடலாக மிட்சுபிஷி குறிப்பிடுகிறது.

 டிசைன்

டிசைன்

கடந்த மார்ச் மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மிட்சுபிஷி XR- PHEV கான்செப்ட்டின் அடிப்படையிலான புதிய கான்செப்ட் மாடலாக வந்துள்ளது. இது க்ராஸ்ஓவர் ரக மாடலாக இருந்தாலும், முகப்பும், பின்புறமும் மிக கம்பீரமாக இருக்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

5 இருக்கைகள் கொண்ட இந்த மாடலில் பக்கெட் இருக்கைகள் கொடுக்கப்பட்டால் 4 பேர் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமை்கப்பட்டுள்ளது. பெரிய டச்ஸ்கிரீன் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், தொடுதிரை அமைப்புடைய சென்டர் கன்சோல், தானியங்கி முறையில் காரை செலுத்துவதற்கான தொழில்நுட்பம் என முற்றிலும் அடுத்த தலைமுறைக்கான கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

முன்னால் செல்லும் வாகனத்துடனான இடைவெளி குறித்த எச்சரிக்கை, தடம் மாறுவது குறித்த எச்சரிக்கை போன்ற தகவல்களை ஓட்டுனர் விண்ட் ஷீல்டிலேயே பார்த்துக் கொள்ளலாம். இதுபோன்று, அனைத்து கட்டுப்பாடுகளும் தொடு உணர்வு பொத்தான்கள் மூலமாக இயக்கும் வகையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 மின் மோட்டார்கள்

மின் மோட்டார்கள்

94 எச்பி பவரை தனித்தனியாக அளிக்க வல்ல இரண்டு மின் மோட்டார்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 45 kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்யும்போது 400 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

தயாரிப்பு

தயாரிப்பு

இந்த புதிய கான்செப்ட் மாடலை தயாரிப்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கு மிட்சுபிஷி நிர்வாகம் பச்சைக் கொடி காட்டினால், 2017ல் தயாரிப்பு நிலை மாடலாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
English summary
Mitsubishi has showcased the future of the company's electric vehicle technology by revealing the eX (all-electric, compact SUV) at the Tokyo Motor Show.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark