இந்தியாவில் அதிக செல்வாக்கு மிக்க கார் நிறுவனங்களின் தரவரிசை பட்டியல்!

Written By:

இந்தியாவில், அதிக செல்வாக்கு மிக்க கார் நிறுவனங்கள் குறித்து ஜேடி பவர் நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது.

அதில், இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி முதலிடத்தை பிடித்திருக்கிறது. அதிகபட்சமாக 1,000 புள்ளிகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில், இந்தியாவின் அதிக செல்வாக்கு மிகுந்த கார் நிறுவனங்களின் பட்டியலை ஸ்லைடரில் காணலாம்.

15. டட்சன்

15. டட்சன்

நிசான் நிறுவனத்தின் துணை பிராண்டாக செயல்பட்டு வரும் டட்சன் நிறுவனம் அதிகபட்சமாக 1,000 புள்ளிகளுக்கு 555 புள்ளிகளை மட்டுமே பெற்று பட்டியலில் பின்தங்கியது. கடந்த ஆண்டு கிராஷ் டெஸ்ட்டில் டட்சன் கோ காருக்கு கிடைத்த தர மதிப்பீடும், இந்த பிராண்டின் மதிப்பு வீழ்ச்சி கண்டதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

14. மிட்சுபிஷி

14. மிட்சுபிஷி

இந்தியாவில் ஒற்றை மாடலை மட்டுமே விற்பனை செய்து வரும் ஜப்பானிய கார் நிறுவனமான மிட்சுபிஷி, 580 புள்ளிகளுடன் 14வது இடத்தை பிடித்தது.

13. ஃபியட்

13. ஃபியட்

இத்தாலிய கார் நிறுவனமான ஃபியட் மிகச்சிறந்த தயாரிப்புகளை கொடுத்தாலும், சேவையில் பின்தங்கி தர வரிசையிலும் பின்தங்கி விட்டது. இந்த ஆய்வில் 603 புள்ளிகளுடன் 13வது இடத்தில் உள்ளது.

12. நிசான்

12. நிசான்

ஜப்பானை சேர்ந்த நிசான் நிறுவனம் 612 புள்ளிகளை பெற்று, 12வது இடத்தை பெற்றிருக்கிறது. ஏற்றுமதியை வைத்து இந்தியாவில் வர்த்தகத்தை ஓரளவு சமாளித்து வருகிறது நிசான்.

11. ரெனோ

11. ரெனோ

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ கார் நிறுவனம், 620 புள்ளிகளுடன் 11வது இடத்தில் இருக்கிறது. சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் க்விட் கார் மூலமாக, அடுத்த ஆண்டு பட்டியலில் நிச்சமாயக கூடுதல் புள்ளிகளுடன் அதிக செல்வாக்கு மிக்க இந்திய கார் நிறுவனங்கள் பட்டியலில் முன்னேறும் என்று நம்பலாம்.

10. செவர்லே

10. செவர்லே

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் கீழ் செயல்படும் செவர்லே நிறுவனம், இந்திய வாடிக்கையாளர்களின் மத்தியில் நம்பகத்தன்மையை பெற முடியாமல் தவிக்கிறது. புதிய மாடல்களை வைத்து சமாளிக்க திட்டமிட்டு, அதற்கான முயற்சிகளை செய்து வருகிறது. ஜேடி பவர் ஆய்வில் 642 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது.

09. ஸ்கோடா ஆட்டோ

09. ஸ்கோடா ஆட்டோ

தரமான தயாரிப்புக்கு பெயர் பெற்ற ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் விற்பனைக்கு பிந்தைய சேவையில் திருப்திகரமாக இல்லை. இதனால், இன்னமும் இந்திய வர்த்தகத்தில் ஓர் நிலையான இடத்தை பெற முடியவில்லை. ஆய்வில் 651 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது.

08. ஃபோர்டு

08. ஃபோர்டு

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் 657 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. புதிய ஆஸ்பயர், புதிய ஃபிகோ கார்களுடன் வர்த்தகத்தை மேம்படுத்த தீவிரமாகியிருக்கிறது. அத்துடன், குறைவான பராமரிப்பு செலவீனத்திற்கும், சர்வீஸ் சென்டர்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்பதற்கும் முயற்சி மேற்கொண்டிருக்கிறது. எனவே, அடுத்த ஆண்டு பட்டியலில் முன்னேறுவதற்கு வாய்ப்புள்ளது.

07. ஃபோக்ஸ்வேகன்

07. ஃபோக்ஸ்வேகன்

ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 669 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. தற்போது மாசு அளவு மோசடி புகாரில் சிக்கியிருப்பதால், தனது செல்வாக்கை இழந்து தவிக்கிறது.

06. டாடா மோட்டார்ஸ்

06. டாடா மோட்டார்ஸ்

இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமைக்குரிய டாடா மோட்டார்ஸ் கார் வர்த்தகத்தில் முக்கிய இடத்தை பெற முடியவில்லை. கடந்த ஆண்டு ஜேடி பவர் ஆய்வில், 720 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. பல புதிய மாடல்களை வெளியிட்டும் இன்னமும் வர்த்தகத்தில் சீரான வளர்ச்சியை தக்க வைக்க முடியாமல் டாடா மோட்டார்ஸ் தடுமாறி வருகிறது.

05. மஹிந்திரா

05. மஹிந்திரா

எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட் பெயரெடுத்த இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனம் ஜேடி பவர் ஆய்வில் 722 புள்ளிகளை பெற்று, 5வது இடத்தை பெற்றிருக்கிறது.

04. ஹோண்டா கார் நிறுவனம்

04. ஹோண்டா கார் நிறுவனம்

ஹோண்டா கார் நிறுவனம் 733 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மை வாய்ந்த மாடல்கள், வாடிக்கையாளர்களின் மதிப்பை பெற்றிருப்பதுடன், ஜேடி பவர் ஆய்விலும் சிறப்பான புள்ளிகளை பெற்றிருக்கிறது.

03. டொயோட்டா

03. டொயோட்டா

நம்பகமான கார் தயாரிப்பாளர் என்ற பெருமைக்குரிய ஜப்பானிய நிறுவனமான டொயோட்டா 744 புள்ளிகளை பெற்று 3வது இடத்தை பிடித்திருக்கிறது.

02. ஹூண்டாய் மோட்டார்ஸ்

02. ஹூண்டாய் மோட்டார்ஸ்

விற்பனையில் மிக வேகமான வளர்ச்சியை பதிவு செய்து வரும் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 767 புள்ளிகளுடன் இந்த ஆய்வு முடிவு பட்டியலில் 2வது இடத்தை பெற்றிருக்கிறது.

01. மாருதி சுஸுகி

01. மாருதி சுஸுகி

யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் மாருதி சுஸுகி நிறுவனம் 839 புள்ளிகளுடன் அதிக செல்வாக்கு மிக்க கார் நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தை பெற்றிருக்கிறது. சரியான விலை, குறைவான பராமரிப்பு செலவு கொண்ட கார்கள், அதிக சர்வீஸ் சென்டர்கள் என்று வாடிக்கையாளர்களின் மனதில் தொடர்ந்து நிலைத்து நின்று வருகிறது மாருதி சுஸுகி.

 
English summary
Top most influential car brands in India: J.D Power Study
Story first published: Friday, October 9, 2015, 11:33 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark