நந்தி மலையில் அனலை கிளப்பிய மோட்டார் பந்தயத்தின் பயிற்சி சுற்று!

Written By:

பெங்களூர் அருகே உள்ள நந்தி ஹில்ஸில் இன்று நந்தி ஹில் கிளைம்ப் போட்டியின் பயிற்சி சுற்று நடந்தது. இதில், ஏராளமான மோட்டார் பந்தய வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இன்று நடந்த பயிற்சி சுற்றில் பைக் மற்றும் கார் பந்தய வீரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். 200க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்க பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கூடுதல் தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

பந்தய ஏற்பாட்டாளர்

பந்தய ஏற்பாட்டாளர்

இன்னர் லைன் ரேஸிங் அமைப்பு இந்த மோட்டார் வாகன மலையேற்ற பந்தயத்தை ஏற்பாடு செய்து நடத்துகிறது. இன்று நடந்த பயிற்சி சுற்றை காண்பதற்கும், பங்கேற்பதற்கும் மோட்டார் பந்தய பிரியர்களும், வீரர்களும் அங்கு குழுமினர்.

 பந்தய தூரம்

பந்தய தூரம்

இன்று 1.6 கிமீ தூரத்துக்கான மலைப்பாதையில் பயிற்சி சுற்று நடந்தது. மலைப்பாதையில் குறிப்பிட்ட தூரத்தை குறைவான நேரத்தில் கடக்கும் வகையில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.

சவால்

சவால்

சில வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்பதற்காக விசேஷ மாற்றங்கள் செய்யப்பட்ட பைக் மற்றும் கார்களையும், சிலர் ஸ்டாக் மாடல் என்று கூறப்படும் எந்த மாற்றங்களும் செய்யாத

 போட்டிகள்

போட்டிகள்

நாளை இருசக்கர வாகனங்களுக்கான இறுதிப் போட்டியும், நாளை மறுதினம் கார்களுக்கான இறுதிப் போட்டியும் நடைபெற உள்ளது.

சீறிப்பாய்ந்த வாகனங்கள்

சீறிப்பாய்ந்த வாகனங்கள்

சில நிமிட இடைவெளியில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அனுமதிக்கப்பட்டன. அப்போது ஒவ்வொருவரும் இலக்கை விரைவாக தொடுவதற்காக வீரர்கள் பைக் மற்றும் கார்களில் சீறிப்பாய்ந்து சென்றனர்.நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெற இருக்கும் நந்தி ஹில் கிளைம்ப் மோட்டார் பந்தய நிகழ்வுகள் மற்றும் செய்தியை டிரைவ்ஸ்பார்க் தளத்தில் படிக்கலாம். இந்த போட்டியில் டிரைவ்ஸ்பார்க் தளத்தின் ஆங்கில செய்தியாளர் சந்தோஷ் ராஜ்குமார் பங்கேற்க இருக்கிறார்.

 

English summary
It's time for for drivers to joke, two-strokes to smoke, and modifications bespoke. That's because the hour of the 2015 Nandi Hill Climb has dawned. The practice session currently underway on the 1.6-kilometre course that winds its way up to the top of the popular tourist attraction, Nandi Hills.
Story first published: Tuesday, January 20, 2015, 19:41 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark