மின்சார கார்களின் அரசன்... புதிய குவான்த் ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம்!

Posted By:

எலக்ட்ரிக் கார்களின் பெர்ஃபார்மென்ஸ் சரியிருக்காது; ஹைட்ரஜன் காரில் இருக்கும் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கின்றதே போன்ற குறைகளை களைந்து, புதிய ஃப்ளோ செல் என்ற மின் உற்பத்தி யுக்தியில் இயங்கும் இரு மின்சார ஸ்போர்ட்ஸ் கார்களின் கான்செப்ட் மாடலை ஜெர்மனியை சேர்ந்த நானோஃப்ளோசெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அதிக ரேஞ்ச் கொண்ட இந்த கார்கள் அடிக்கடி சார்ஜ் செய்ய அவசியமிருக்காது. எனவே, இந்த கார்கள் எதிர்கால மின்சார கார்களுக்கான அடித்தளமிடும் மாடல்களை கருதப்படுகின்றன. இந்த ஃப்ளோ செல் கார்கள் ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த இந்த கார்களை பற்றிய கூடுதல் தகவல்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

இரு மாடல்கள்

இரு மாடல்கள்

குவான்த் எஃப் மற்றும் குவான்டினோ இவி என்ற பெயர்களில் இந்த புதிய கான்செப்ட் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இதில், குவான்ட் எஃப் ஸ்போர்ட்ஸ் கார் குவான்ட் இ காரின் மேம்படுத்தப்பட்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

நானோ ஃப்ளோசெல் தொழில்நுட்பம்

நானோ ஃப்ளோசெல் தொழில்நுட்பம்

நேர்மின் சுமை அயனிகள் மற்றும் எதிர்மின் சுமை அயனிகள் கொண்ட கரைசல்கள் இரு டேங்குகளில் இருக்கின்றன.இவை சவ்வூடு பரவல் முறையில் ஒன்று சேரும்போது உண்டாகும் அபரிமிதமான மின் ஆற்றல் இரண்டு சூப்பர் கெப்பாசிட்டர்கள் கொண்ட ஃப்ளோ பேட்டரி மூலம் சேமிக்கப்படுகிறது. இந்த மின்சாரம் மூலம் சக்திவாய்ந்த காரில் இருக்கும் மின் மோட்டார்கள் இயக்கப்படுகின்றன.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

சாதாரண மின்சார கார்கள் மற்றும் ஹைட்ரஜனில் இயங்கும் கார்களைவிட இந்த காரின் சூப்பர் கெப்பாசிட்டர்கள் கொண்ட பேட்டரி மின் ஆற்றலை மிகச்சிறப்பாக கடத்தி காரின் மின் மோட்டார்களை இயக்கும். அதிகபட்சம் 2000 ஆம்பியர் மின்சார ஆற்றலை வழங்கும் திறன் கொண்டது இந்த சூப்பர் கெப்பாசிட்டர்கள் கொண்ட பேட்டரி. கடந்த சில ஆண்டுகளாக இந்த கான்செப்ட் கார் உப்புத் தண்ணீர் கரைசல் மூலம் சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இது முற்றிலும் புதிய ஃபார்முலாவில் மின் ஆற்றல் உற்பத்தி செய்யப்படுவதாக நானோ ஃப்ளோசெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சவாலான பெர்ஃபார்மென்ஸ்

சவாலான பெர்ஃபார்மென்ஸ்

குவான்ட் எஃப் கார் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 2.8 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது. மணிக்கு அதிகபட்சமாக 300 கிமீ வேகத்தை அசால்ட்டாக தொடக்கூடிய வல்லமை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் ரேஞ்ச்

எரிபொருள் ரேஞ்ச்

250லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு எரிபொருள் டேங்க் கொண்ட இந்த கார் 5.25 மீட்டர் நீளமும், 2.3 டன் எடையும் கொண்டது. இந்த காரில் 4 பேர் பயணிக்க முடியும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 800 கிமீ தூரம் வரை பயணிக்குமாம். 22 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

குவான்டினோ கார்

குவான்டினோ கார்

உலகின் மிக குறைவான மின் அழுத்தத்தில் இயங்கும் மின்சார கான்செப்ட் காராக குவான்டினோ தெரிவிக்கப்பட்டுள்ளது. 48 வோல்ட்டில் இந்த கார் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இந்த காரின் எலக்ட்ரிக் மோட்டார்கள் 136 எச்பி பவரை அளிக்கக்கூடியது.

குவான்டினோவும் 4 சீட்டர்

குவான்டினோவும் 4 சீட்டர்

3.91 மீட்டர் நீளமுடைய குவான்டினோ காரிலும் 4 பேர் பயணிக்க முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 1000 கிமீ தூரம் வரை பயணிக்கலாமாம். இந்த காரில் 175 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரு எரிபொருள் டேங்குகள் உள்ளன.

விரைவில் சோதனை ஓட்டம்

விரைவில் சோதனை ஓட்டம்

இந்த காரின் புரோட்டோடைப் மாடல்கள் விரைவில் சாலைகளில் வைத்து சோதனை ஓட்டங்கள் செய்யப்பட உள்ளதாக நானோஃப்ளோசெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. வர்த்தக ரீதியிலான உற்பத்திக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளும், காரில் செய்ய வேண்டிய மாறுதல்களும் தீவிரமாக நடந்து வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 
English summary
NanoFlowcell has showcased two concept cars for this year's Geneva Motor Show.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark