கூடுதல் சிறப்பம்சங்கள், வசதிகளுடன் 2015 ரெனோ டஸ்ட்டர் - முழு விபரம்!

By Saravana

கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகளுடன் ரெனோ டஸ்ட்டரின் 2 வீல் டிரைவ் மாடல் தற்போது மேம்படுத்தப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. டஸ்ட்டரை முன்பதிவு செய்துள்ளோரும், செய்ய விரும்புவோரும் டீலரில் புதிய மாடல் குறித்த விபரத்தை கேட்டுக்கொண்டு முடிவு எடுப்பது நல்லது.

இந்த புதிய டஸ்ட்டரில் வெளிப்புற தோற்றத்திற்கு சிறிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால், உள்பக்க வடிவமைப்பு மற்றும் வசதிகள் கூடுதலாக்கப்பட்டிருக்கிறது. அதுபற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


பாடி கலர் மிரர்

பாடி கலர் மிரர்

டஸ்ட்டர் 2 வீல் டிரைவ் மாடல் தற்போது பாடி கலர் ரியர் வியூ கண்ணாடிகள் மற்றும் கைப்பிடிகளுடன் வந்துள்ளது. வேறு மாற்றங்கல் இல்லை. ஆனால், உள்பக்கத்தில் அதிக சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

உள்பக்க சிறப்பம்சங்கள்

உள்பக்க சிறப்பம்சங்கள்

முன்புற பயணிகளுக்கு ஆர்ம் ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய மாடலில் சாஃப்ட் டச் டேஷ்போர்டு, 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் புதிய ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரியுடன் வந்துள்ளது. மேலும், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும், சர்வீஸ் இண்டிகேட்டர் மற்றும் கியர் ஷிப்ட் இண்டிகேட்டருடன் கூடிய புதிய மல்டி இன்ஃபர்மேஷன் திரையும் உள்ளது. இந்த வசதிகள் ஆல் வீல் டிரைவ் மாடலில் மட்டுமே இதுவரை வழங்கப்பட்டு வந்தன.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

ரெனோ டஸ்ட்டர் 2 டிரைவ் மாடல் தற்போது 103 பிஎச்பி பவரை அளிக்கும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலிலும், 85 பிஎச்பி மற்றும் 108.5 பிஎச்பி பவர் கொண்ட இரு விதமான 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கிறது.

ஈக்கோ மோடு

ஈக்கோ மோடு

புதிய டஸ்ட்டரின் டீசல் மாடலில் வழங்கப்பட்டிருக்கும் ஈக்கோமோடு தொழில்நுட்ப வசதி மூலம் 10 சதவீதம் வரை கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும் என ரெனோ தெரிவிக்கிறது. 85 பிஎச்பி பவர் கொண்ட டீசல் மாடல் லிட்டருக்கு 19.87 கிமீ மைலேஜையும், 108.5 பிஎச்பி பவர் கொண்ட டீசல் மாடல் லிட்டருக்கு 19.64 கிமீ மைலேஜையும் வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

இஎஸ்பி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், டியூவல் ஏர்பேக்ஸ் போன்ற பாதுகாப்பு வசதிகளை ரெனோ டஸ்ட்டர் கொண்டுள்ளது. குறிப்பிட்ட வேகத்தில் கார் கதவுகள் தானாக பூட்டிக் கொள்ளும் ஸ்பீடு சென்சிட்டிவ் டோர் லாக்ஸ் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

விலை

விலை

2015 ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி ரூ.8.30 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

Most Read Articles
English summary

 Renault India, one of the country’s fastest growing automobile manufacturers, continued with its aggressive product launch strategy in India by introducing the New Generation Duster. The new range boasts of superior engineering, all-new safety and comfort features and improved fuel efficiency, made possible by several technical and design enhancements. The new range starts at Rs. 8.30 Lakh (Delhi ex-showroom).
Story first published: Saturday, March 14, 2015, 10:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X