புதிய அஸ்டன் மார்ட்டின் வல்கன் ஹைப்பர் கார் அறிமுகம் - விபரம்

Written By:

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் புதிய ஹைப்பர் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அஸ்டன் மார்ட்டின் வல்கன் என்ற பெயர் கொண்ட அதிசக்திவாய்ந்த இந்த ஹைப்பர் கார் அடுத்த வாரம் துவங்க இருக்கும் ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

லாஃபெராரி எஃப்எக்ஸ்எக்ஸ் கே, போர்ஷே 919 மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மெக்லாரன் பி1 ஜிடிஆர் கார்களை போன்றே இதுவும் ரேஸ் டிராக் வெர்ஷன் மாடல். எனவே, சாதாரண சாலைகளுக்கான கார் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஹைப்பர் காரின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

மொத்தம் 24 வல்கன் கார்களை மட்டுமே தயாரிக்க இருப்பதாக அஸ்டன் மார்ட்டின் தெரிவித்திருக்கிறது.

டிசைன்

டிசைன்

ரேஸ் டிராக் வெர்ஷன் என்பதால் வழக்கமான அஸ்டன் மார்ட்டின் டிசைன் தாத்பரியத்திலிருந்து சற்று வேறுபட்ட டிசைனை கொண்டிருக்கிறது. ஆனால், வழக்கமான அஸ்டன் மார்ட்டின் க்ரில் காரின் பிராண்டு முத்திரையை காட்டுவதாக அமைந்திருக்கிறது. சிறப்பான ஏரோடைனமிக்ஸ் வழங்குவதற்கான சிறப்பு ஆக்சஸெரீகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

சர்வதேச மோட்டார் பந்தய கூட்டமைப்பின் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டதாக இந்த காரின் பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சேஸீ

சேஸீ

அஸ்டன் மார்ட்டின் ஒன் - 77 காரின் அதே சேஸீயின் அடிப்படையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலகு எடையும், அதிக உறுதியும் கொண்ட கார்பன் ஃபைபர் பாடி கொண்டது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த அஸ்டன் மார்ட்டின் ஹைப்பர் காரில் 800 எச்பி பவரை அளிக்கும் 7.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு சீக்குவன்ஷியல் கியர்பாக்ஸ் உள்ளது. ஆனால், இந்த காரின் பெர்ஃபார்மென்ஸ் விபரம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

 இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

ரேஸ்டிராக் வெர்ஷன் என்பதால், ஆன்ட்டி ரோல்பார் மற்றும் அட்ஜெஸ்ட்டபிள் டேம்பர்கள் கொண்ட புஷ்ராடு சஸ்பென்ஷன் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் இருக்கும் 380 மிமீ விட்டம் கொண்ட பிரெம்போ கார்பன் செராமிக் பிரேக் டிஸ்க்குகளும், பின்புறத்தில் இருக்கும் 360 மிமீ விட்டம் கொண்ட பிரெம்போ கார்பன் செராமிக் டிஸ்க்குகள் கொண்ட பிரேக் சிஸ்டம் இந்த காரின் வேகத்தை கட்டுப்படுத்தி நிறுத்த உதவும்.

 
English summary

 Aston Martin has given its new Vulcan special an early unveiling today, revealing the powerful new hypercar ahead of its Geneva debut next week.
Story first published: Wednesday, February 25, 2015, 8:29 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark