இந்த மாதம் ரிலீசாகும் புதிய கார் மாடல்கள்!

Written By:

கார் விற்பனையில் புதிய உத்வேகம் பெறும் எண்ணத்துடன் புதிய கார் மாடல்களை களமிறக்க சில கார் நிறுவனங்கள் உற்சாகமாக ஆயத்தமாகி வருகின்றன.

அந்த வகையில், இந்த மாதம் விற்பனைக்கு வர இருக்கும் புதிய கார் மாடல்களின் விபரத்தை நினைவுக்காக இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

புதிய டட்சன் கோ ப்ளஸ்

புதிய டட்சன் கோ ப்ளஸ்

வரும் 15ந் தேதி டட்சன் கோ ப்ளஸ் கார் விற்பனைக்கு வர இருக்கிறது. டட்சன் பிராண்டில் நிசான் அறிமுகம் செய்ய இருக்கும் இரண்டாவது கார் மாடல் இது. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட மினி எம்பிவி மாடலான இந்த கார் 7 சீட்டர் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது வரிசை இருக்கையை சிறுவர்கள் அமர்வதற்கோ அல்லது பொருட்கள் வைப்பதற்கான இடவசதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.ரூ.11,000 பணம் செலுத்தி இந்த காருக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலில், 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. டாப் வேரியண்ட் மாடல் ரூ.5 லட்சத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 புதிய டாடா போல்ட்

புதிய டாடா போல்ட்

ஸெஸ்ட் காம்பேக்ட் செடான் காரைத் தொடர்ந்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல்தான் டாடா போல்ட். முற்றிலும் புதிய டிசைனில் வரும் இந்த புதிய டாடா கார் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் மாடலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் வர இருக்கிறது. வரும் 22ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கும் இந்த புதிய கார் மாடல் ரூ.4.25 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ கிளாஸ் செடான்

மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ கிளாஸ் செடான்

கடந்த ஆண்டு விற்பனையில் 10,000 கார்கள் விற்பனை என்ற புதிய மைல்கல்லை கடந்து பூரிப்பில் இருக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ். அதே உற்சாகத்துடன், கார் விற்பனையை தக்க வைக்கும் விதத்தில், புதிய கார் மாடலை வரும் 22ந் தேதி விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ45 ஏஎம்ஜி செடான் காரின் சாதாரண வகை மாடல் இது. பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஆடி ஏ3 செடான் காருடன் நேருக்கு நேர் மோத இருக்கிறது இந்த புதிய பென்ஸ் கார். 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் மாடல்களில் வர இருக்கிறது. இரண்டிலும் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக விற்பனைக்கு வருகிறது. ரூ.30 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் குறைவான விலை சொகுசு செடான் மாடலாக வருவதால், அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஃபியட் அபார்த் 595 காம்படிஷன்

ஃபியட் அபார்த் 595 காம்படிஷன்

ஃபியட் நிறுவனத்தின் அபார்த் பெர்ஃபார்மென்ஸ் பிராண்டில் முதல் மாடலாக அபார்த் 595 காம்படிஷன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அபார்த் 500 கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்தில் நடந்த ஆட்டோமொபைல் நிகழ்ச்சி ஒன்றில், அபார்த் 595 காம்படிஷன் மாடல் இந்தியாவுக்கான மாடலாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த காரில் 158 பிஎச்பி பவரையும், 201 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் கொண்டது. ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மாத இறுதியில் இந்த புதிய கார் மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது. அறிமுக தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

 
English summary
In this article we'll talk about the cars launching in the first month of 2015

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark