செவர்லே காம்பேக்ட் எஸ்யூவி பற்றிய புதிய தகவல்கள்!

Written By:

ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு நேர் போட்டியான புதிய எஸ்யூவி மாடலை செவர்லே பிராண்டில் ஜெனரல் மோட்டார்ஸ் களமிறக்க உள்ளது.

இந்த புதிய மாடல் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. குறியீட்டுப் பெயர் மற்றும் இதர தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 குறியீட்டுப் பெயர்

குறியீட்டுப் பெயர்

GEM- B என்ற குறியீட்டுப் பெயரில் புதிய செவர்லே காம்பேக்ட் எஸ்யூவி தயாராகிறது. முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் இந்த காம்பேக்ட் எஸ்யூவி உருவாக்கப்படுகிறது.

காம்பேக்ட் எஸ்யூவி

காம்பேக்ட் எஸ்யூவி

இது 4 மீட்டர் நீளத்துக்கும் குறைவான எஸ்யூவி மாடலாக இருக்காது. அதேநேரத்தில், ஹூண்டாய் க்ரெட்டா போன்று 4 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக வடிவமைக்கப்படுகிறது.

டிசைன்

டிசைன்

ஹூண்டாய் க்ரெட்டாவுடன் செக்மென்ட் ஒப்பீடுக்கு கூறினாலும், இது மாருதி எஸ் க்ராஸ் போன்று க்ராஸ்ஓவர் பாடி ஸ்டைல் கொண்ட மாடலாக உருவாக்கப்படுகிறது.

 எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

தற்போதைய தகவல்களின்படி, 1.4 லிட்டர் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் ஆகிய பெட்ரோல், டீசல் எஞ்சின் மாடல்களில் வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

அறிமுகம்

அறிமுகம்

வரும் 2017ம் ஆண்டில் இந்த புதிய எஸ்யூவி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
English summary
Chevrolet has codenamed of its new SUV as the ‘Gem-B’.
Story first published: Saturday, October 24, 2015, 11:19 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos