நாளை ரிலீசாகும் புதிய ஃபோர்டு ஃபிகோ காரின் படங்கள்!

Written By:

புதிய தலைமுறை வடிவமைப்பு, வசதிகளுடன் மாறியிருக்கும் புதிய ஃபோர்டு ஃபிகோ கார் டெல்லியில் நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த காரின் அதிகாரப்பூர்வ படங்கள் இன்று வெளியாகியுள்ளன.

முந்தைய தலைமுறை வெற்றியை தக்க வைக்கும் விதத்தில், நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் எஞ்சின் மாற்றங்களுடன் வருவதால், வாடிக்கையாளர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

டிசைன்

டிசைன்

முந்தைய தலைமுறை மாடலுக்கும், புதிய தலைமுறை மாடலுக்கும் துளிகூட சம்பந்தம் கிடையாது. இது முற்றிலும் புதிய மாடலாகவே டிசைன் செய்யப்பட்டு சந்தைக்கு வருகிறது. கடந்த ஜூலையில் வந்த ஃபோர்டு ஆஸ்பயர் காரின் ஹேட்ச்பேக் மாடல் என்பதால், அதிக ஒற்றுமைகளை காண முடிகிறது. வசதிகளிலும் அவ்வாறுதான்.

 இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியர் டிசைன் மற்றும் பாகங்களும் ஆஸ்பயர் காரை ஒத்திருக்கிறது. 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவற்றுடன் ஃபோர்டு நிறுவனத்தின் சிங்க் தொழில்நுட்பமும் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த பயனுள்ளதாக வசதியாக இருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய தலைமுறை ஃபிகோ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. டீசல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சின் இடம்பெற்றிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

புதிய ஃபோர்டு ஃபிகோ காரின் டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்ற பல பாதுகாப்பு வசதிகள் இருக்கும்.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.4.30 லட்சம் முதலான ஆரம்ப விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
English summary
The new Ford Figo's official images have been leaked in online.
Story first published: Tuesday, September 22, 2015, 17:03 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark