மூன்றாம் தலைமுறை ஸ்கோடா சூப்பர்ப் காரின் படங்கள் வெளியானது!

Written By:

மூன்றாம் தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டிருக்கும் புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரின் அதிகாரப்பூர்வ படங்கள் மற்றும் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முந்தைய மாடலைவிட இன்னும் சிறப்பான தோற்றமளிக்கும் விதத்தில் வெகு நேர்த்தியாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரின் படங்கள் மற்றும் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்

டிசைன்

முகப்பில் புதிய டிசைனிலான க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள் முகப்பை அலங்கரிக்கின்றன. கூபே பாடி ஸ்டைலிலான தோற்றம் கொண்டதாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பின்புற மாற்றங்கள்

பின்புற மாற்றங்கள்

பின்புறத்தில் எல்இடி டெயில்லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது, டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஃபோக்ஸ்வேகன் கார்களின் ஸ்டைலுக்கு மாற்றங்கள் கண்டிருக்கின்றன.

சிறப்பு வசதிகள்

சிறப்பு வசதிகள்

டைனமிக் சேஸீ கன்ட்ரோல், சாலைநிலைகளுக்கு ஏற்றவாறு டிரைவிங் ஆப்ஷனை மாற்றும் வசதி, ரெயின் சென்சார், லைட் சென்சார், ஹீட்டடு சீட்ஸ், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், எலக்ட்ரானிக் கன்ட்ரோல் கொண்ட பனரோமிக் ஸ்லைடு ரூஃப் ஆகியவை முக்கிய அம்சங்களாக கூறலாம்.

 எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

மூன்று பெட்ரோல் எஞ்சின்கள் மற்றும் இரண்டு டீசல் எஞ்சின்கள் கொண்ட மாடல்களில் கிடைக்கும். 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 123 எச்பி பவரை அளிக்கும் மாடலிலும், 147.88 எச்பி பவரை அளிக்கும் மாடலிலும் கிடைக்கும்.

1.8 லிட்டர் பெட்ரோல் மாடல் 177.47 எச்பி பவரை அளிக்கும் மாடலில் கிடைக்கும். டாப் பெட்ரோல் மாடலான 2.0 லிட்டர் எஞ்சின் கொண்ட மாடல் அதிகபட்சமாக 276 எச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்டதாக இருக்கும்.

1.6 லிட்டர் டீசல் மாடல் 118.31 எச்பி பவரை அளிக்கும் பேஸ் மாடலாக வருகிறது. 2.0 டீசல் எஞ்சின் 147.88 எச்பி பவரை அளிக்கும் மாடலிலும், 187.32 எச்பி பவரை அளிக்கும் மாடலிலும் வர இருக்கிறது.

இந்திய பிரவேசம்

இந்திய பிரவேசம்

வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
English summary
Czech automobile manufacturer has unveiled its redesigned Superb in Prague. The luxury sedan now looks more bolder and sharper than its predecessors. This is the third generation model and is most likely to come to India as well.
Story first published: Wednesday, February 18, 2015, 12:13 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark