ஜூலை 8ல் புதிய ஹோண்டா ஜாஸ் விற்பனைக்கு அறிமுகம்?

Written By:

வரும் ஜூலை 8ந் தேதி புதிய ஹோண்டா ஜாஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டிருக்கும் புதிய ஹோண்டா ஜாஸ் கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

Honda Jazz
 

இதுவரை பெட்ரோல் மாடலில் மட்டுமே விற்பனைக்கு இருந்த ஹோண்டா ஜாஸ் கார் இப்போது டீசல் மாடலிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதனால், வாடிக்கையாளர்கள் மத்தியில் புதிய ஹோண்டா ஜாஸ் கார் மீது அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். மேலும், சிறப்பான வசதிகளையும் கொண்டிருக்கும்.

இந்த நிலையில், அடுத்த மாதம் 8ந் தேதி புதிய ஹோண்டா ஜாஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த செய்திகளை ஹோண்டா கார் நிறுவனம் இதுவரை உறுதி செய்யவில்லை.

English summary
New Honda Jazz To Be Launched in India On 8th July.
Story first published: Saturday, June 13, 2015, 10:08 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark