புதிய ஹூண்டாய் 4எஸ் ப்ளூயிடிக் வெர்னா கார் விற்பனைக்கு வந்தது -விபரம்

டிசைன் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் வெர்னா கார் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் சற்றுமுன் அறிமுகம் செய்யப்பட்டது.

ஹூண்டாய் 4S ஃப்ளூயிடிக் வெர்னா என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடல் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


4S ப்ளூயிடிக் வெர்னா

4S ப்ளூயிடிக் வெர்னா

Style, Safety, Sophistication மற்றும் Speed ஆகியவற்றை குறிப்பிடும் வகையில், 4S ப்ளூயிடிக் வெர்னா என்று அழைக்கிறது ஹூண்டாய்.

5 ஸ்டார் ரேட்டிங்

5 ஸ்டார் ரேட்டிங்

உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்ட்டுகளில் ஹூண்டாய் வெர்னா காருக்கு அதிகபட்சமான 5 நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கிறது. இதனால், இந்த செக்மென்ட்டில் சிறந்த பாதுகாப்பு கட்டமைப்பு கொண்ட கார் மாடலாக கூறலாம்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய 4எஸ் வெர்னா கார் ஏற்கனவே இருந்தது போன்று இரண்டு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். 107 பிஎஸ் பவரை அளிக்கும் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 123 பிஎஸ் பவர் கொண்ட 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கும். டீசல் மாடலில் 90 பிஎஸ் பவர் கொம்ட 1.4 லிட்டர் சிஆர்டிஐ மாடலிலும், 128 பிஎஸ் பவர் கொண்ட 1.6 லிட்டர் மாடலிலும் கிடைக்கும். பெட்ரோல், டீசல் மாடல்கள் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும், 1.6 லிட்டர் டீசல் மாடல் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலில் தேர்வு செய்து கொள்ளலாம்.

மைலேஜ்

மைலேஜ்

1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் லிட்டருக்கு 17.43 கிமீ மைலேஜையும், 1.6 லிட்டர் பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17.01 கிமீ மைலேஜையும் வழங்கும். ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 15.74 கிமீ மைலேஜை வழங்கும். இதேபோன்று, 1.4 லிட்டர் டீசல் மாடல் லிட்டருக்கு 24.8 கிமீ மைலேஜையும், 1.6 லிட்டர் 123 பிஎஸ் பவர் மாடல் லிட்டருக்கு 23.9 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டீசல் ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 19.08 கிமீ மைலேஜை வழங்கும் என்று ஹூண்டாய் கூறியிருக்கிறது.

விலை

விலை

பெட்ரோல் மாடல்

1.4 லிட்டர் எஞ்சின்: ரூ.7,73,903

1.6 லி எஸ்: ரூ.8.84,939

1.6லி எஸ்(O): ரூ.9,38,217

1.6லி எஸ்(O)ஏடி: ரூ.10,11,378

1.6 எஸ்எக்ஸ்: ரூ.10,15,505

டீசல்

1.4 லி எஞ்சின்: ரூ.8,94,910

1.6லி எஸ்: ரூ.9,99,900

1.6லி எஸ்(O):ரூ.10,59,241

Most Read Articles
English summary
Hyundai has launched its latest facelift model of the Verna, called the Verna 4S Fluidic, with 4S standing for Style, Safety, Speed, and Sophistication.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X