புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் க்ராஸ்ஓவர் விற்பனைக்கு வந்தது - முழு விபரம்

By Saravana

புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் க்ராஸ்ஓவர் ரக மாடல் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

பெட்ரோல் மாடலில் இரு வேரியண்ட்டுகளிலும், டீசல் மாடல் மூன்று வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த புதிய க்ராஸ்ஓவர் மாடல் 190மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி டெயில் லைட்டுகள், டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஆகியவை புதிது. பாடி கிளாடிங்குகள் மற்றும் ரூஃப் ரெயில்கள் மூலம் க்ராஸ்ஓவர் ஸ்டைலுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

இருவிதமான இன்டிரியர் கொண்டதாக கிடைக்கும். ஆரஞ்ச் மற்றும் கருப்பு வண்ணக் கலவையிலும், நீலம் மற்றும் கருப்பு வண்ணக் கலவையிலும் இருவிதமான இன்டிரியர் வண்ணத்தில் கிடைக்கும்.

வசதிகள்

வசதிகள்

ஆட்டோ -போல்டிங் ரியர் வியூ கண்ணாடிகள், 1 ஜிபி சேமிப்பு திறன் கொண்ட 2 டின் ஆடியோ சிஸ்டம், ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளன. அலுமினியம் பெடல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

பெட்ரோல் மாடலில் 82 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும் 1.2 லிட்டர் எஞ்சின் உள்ளது. இது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் கிடைக்கும். டீசல் மாடலில் 89 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.4 லிட்டர் எஞ்சின் உளஅளது. இந்த எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17.19 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் 21.19 கிமீ மைலேஜையும் வழங்கும்.

விலை

விலை

பெட்ரோல் மாடல்

பேஸ் வேரியண்ட்: ரூ.6.38 லட்சம்

எஸ் வேரியண்ட்: ரூ.7.09 லட்சம்

டீசல் மாடல்

பேஸ் வேரியண்ட்: ரூ.7.63 லட்சம்

எஸ் வேரியண்ட்: ரூ.8.34 லட்சம்

எஸ்எக்ஸ் வேரியண்ட்: ரூ.8.89 லட்சம்

Most Read Articles
English summary
Hyundai has launched today, of its new i20 Active pseudo crossover in India start at INR.6.38 lakhs.
Story first published: Tuesday, March 17, 2015, 13:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X