புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் காரை ஒரு ரவுண்டு சுற்றி பார்த்துடுவோமே!

Posted By:

வரும் 17ந் தேதி புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் விற்பனைக்கு வருகிறது. கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்த எலைட் ஐ20 ஹேட்ச்பேக் காரில் மாற்றங்களை செய்து க்ராஸ்ஓவர் மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.

க்ராஸ்ஓவர் ரகத்தில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கும் இந்த புதிய காரின் அதிகாரப்பூர்வ படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன் மாற்றங்கள்

டிசைன் மாற்றங்கள்

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய கிரில் அமைப்பு, புதிய பம்பர், அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஸ்கிட் பிளேட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பாடி கிளாடிங்குகள் கொண்டதாக இருப்பதால் எலைட் ஐ20 காரைவிட தோற்றத்தில் வேறுபடுகிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

இருவிதமான இன்டிரியர் கொண்ட மாடல்களில் கிடைக்கும். ஒன்று ஆரஞ்ச் மற்றும் கருப்பு வண்ணத்திலும், மற்றொன்று அக்வா புளூ என்ற நீலம் மற்றும் கருப்பு வண்ணக் கலவையில் கிடைக்கும். ஸ்போர்ட் பெடல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

எஞ்சின் ஆப்ஷன்களில் மாற்றம் இருக்காது. எலைட் ஐ20 காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சின் ஆப்ஷன்களுடன் வருகிறது.இந்த புதிய காரில் 83 பிஎஸ் பவரை அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாகவும், 90 பிஎஸ் பவரை அளிக்கும் 1.4 லிட்டர் டீசல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாகவும் வருகிறது.

 அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ்

அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ்

இந்த புதிய க்ராஸ்ஓவர் மாடல் எலைட் ஐ20 காரைவிட 20 மிமீ கூடுதல் கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டது. அதாவது, 190 மிமீ கிரவுண்ட் கிளிரயன்ஸ் கொண்டதாக வர இருக்கிறது.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.6.5 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய காரை ஹூண்டாய் மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

ஃபோக்ஸ்வேகன் க்ராஸ்போலோ, டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ், ஃபியட் அவென்ச்சுரா போன்ற க்ராஸ்ஓவர் மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

 
English summary
Just a few days stand between Indian auto enthusiasts and the all-new Hyundai i20 Active crossover. Days ahead of its arrival in the market, the model revealed completely.
Story first published: Friday, March 13, 2015, 6:00 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark