ஏபிஎஸ், ஏர்பேக்குடன் மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

Posted By:

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் சென்னை ஆன்ரோடு விலையை ஒரே க்ளிக்கில் தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ சென்னை ஆன்ரோடு விலை!

கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோவின் எஸ்-4 வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்-2, எஸ்-4, எஸ்-6, எஸ்-8 மற்றும் எஸ்-10 ஆகிய வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில், எஸ்-4 மற்றும் எஸ்-10 ஆகிய வேரியண்ட்டுகள் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கிறது.

Mahindra Scorpio
 

இந்த நிலையில், எஸ்-4 வேரியண்ட்டில் கூடுதல் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டு புதிய வேரியண்ட்டாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்கார்ப்பியோ எஸ்-4+ என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய வேரியண்ட்டில் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், இபிடி பிரேக் தொழில்நுட்பம், முன்புற ஏர்பேக்குகள், சீட்பெல்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஃபாலோ மீ ஹெட்லைட்டுகள், பானிக் பிரேக் இன்டிகேட்டர் போன்ற பாதுகாப்பு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், ஷிஃப்ட் ஆன் தி ஃப்ளை ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் இனி எஸ்-4+ வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். மேலும், கருப்பு நிற பாடி கிளாடிங், ஸ்டீல் வீல்களுடன் இந்த வேரியண்ட் கிடைக்கும். இதற்கு மேலான வேரியண்ட்டுகள் பாடி கலர் கிளாடிங் மற்றும் அலாய் வீல்களுடன் கிடைக்கிறது.

ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் எஸ்-4 வேரியண்ட்டை விட ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை கூடுதல் விலையில் இந்த புதிய வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Country's largest utility vehicle manufacturer Mahindra has introduced a new variant of the new Scorpio called the Scorpio S4+. The new Mahindra Scorpio S4+ variant gets dual front airbags, ABS with EBD, seatbelt-reminder warning, panic brake indication and follow-me-home headlamps as standard. 

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark