1000 பிஎஸ் சக்திகொண்ட மெக்லாரன் பி1 ஜிடிஆர் கார் அறிமுகம்!

By Saravana

கடந்த ஆண்டு அதிசக்திவாய்ந்த மெக்லாரன் பி1 கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், ரேஸ் டிராக்கில் மட்டுமே ஓட்டக்கூடிய சிறப்பம்சங்கள் கொண்ட மெக்லாரான் பி1 ஜிடிஆர் கார் தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

அடுத்த மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கும் இந்த கார் மெக்லாரன் நிறுவனத்தின் சிறப்பு ஓட்டுனர் திட்டத்தில் சேர்பவர்கள் மட்டுமே வாங்க முடியும். இந்த திட்டம் இந்த ஆண்டு இறுதியில் ஸ்பெயின் நாட்டிலுள்ள கேட்டலூன்யா சர்க்யூட்டில் துவங்க இருக்கிறது. இந்த காரின் அருமை, பெருமைகளை ஸ்லைடரில் காணலாம்.


தயாரிப்பு நிலை மாடல்

தயாரிப்பு நிலை மாடல்

கடந்த 6 மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட மெக்லாரன் பி1 ஜிடிஆர் கான்செப்ட் மாடலுக்கும், தற்போது தயாரிப்பு நிலையை எட்டியிருக்கும் மாடலுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை. ஆனால், மஞ்சள், பச்சை வண்ணத்தில் பாடி கிராஃபிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

லீ மான்ஸ் ரேஸ் கார் நினைவாக...

லீ மான்ஸ் ரேஸ் கார் நினைவாக...

20 ஆண்டுகளுக்கு முன் லீ மான்ஸ் ரேஸில் கலக்கிய மெக்லாரன் எஃப்1 ஜிடிஆர் காரின் பெருமையை எடுத்துக்கூறும் விதத்தில். அதே வண்ணத்தை இந்த காருக்கு தற்போது மெக்லாரன் பயன்படுத்தியிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

மெக்லாரன் பி1 ஜிடிஆர் காரில் 3.8 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து செயலாற்றுகின்றன. அதிகபட்சமாக 986 பிஎச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி இலக்கு

உற்பத்தி இலக்கு

இது லிமிடேட் எடிசன் மாடல். மொத்தமாக 35 கார்கள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்யப்பட உள்ளன.

விலை

விலை

3 மில்லியன் அமெரிக்க டாலர் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.

Most Read Articles
English summary
McLaren has revealed the production version of its track-ready P1 GTR car.
Story first published: Thursday, February 19, 2015, 11:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X