டோக்கியோ மோட்டர் ஷோவில் ரிலீசாகும் புதிய மினி கூப்பர் கன்வர்டிபிள் கார்!!

Written By:

மினி கூப்பர் நிறுவனம், புதிய மினி கூப்பர் கன்வர்டிபிள் காரின் படங்கள், தகவல்களை வெளியிட்டுள்ளது. இன்று துவங்கியிருக்கும் 2015 டோக்கியோ மோட்டர் ஷோவில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டோக்கியோ மோட்டர் ஷோ அக்டோபர் 29 துவங்கி, நவம்பர் 8-ஆம் தேதி வரை, ஜப்பானின் தலைநகர் நடைபெறுகின்றது. மினி கூப்பர் நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை கன்வர்டிபிள் மாடல் கார்களை இந்த ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்கின்றது.

கார்களின் இஞ்ஜின் மற்றும் திறன்;

கார்களின் இஞ்ஜின் மற்றும் திறன்;

புதிய மினி கூப்பர் கன்வர்டிபிள் கார்களை இயக்கும், 3 பெட்ரோல் இஞ்ஜின்கள் மற்றும் 2 டீசல் இஞ்ஜின்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

(*) 1.2 லிட்டர், 3 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் இஞ்ஜின் --- வெளிபடுத்தகூடிய திறன் - 102 பிஹெச்பி

(*) 1.5 லிட்டர், 3 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் இஞ்ஜின் --- வெளிபடுத்தகூடிய திறன் - 134 பிஹெச்பி

(*) 2.0 லிட்டர், 4 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் இஞ்ஜின் --- வெளிபடுத்தகூடிய திறன் - 189 பிஹெச்பி

(*) 1.5 லிட்டர், 3 சிலிண்டர்கள் கொண்ட டீசல் இஞ்ஜின் --- வெளிபடுத்தகூடிய திறன் - 114 பிஹெச்பி

(*) 2.0 லிட்டர், 4 சிலிண்டர்கள் கொண்ட டீசல் இஞ்ஜின் --- வெளிபடுத்தகூடிய திறன் - 168 பிஹெச்பிஅனைத்து இஞ்ஜின்களும் 6-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது. இவை முன் சக்கரங்களுக்கு சக்தியை வழங்கி வாகனத்தை இயக்க செய்கிறது.

வாடிக்கையாளர்கள் 6-ஸ்பீட் ஸ்டெப்டிரானிக் அல்லது 6-ஸ்பீட் ஸ்டெப்டிரானிக் ஸ்போர்ட்ஸ் டிரான்ஸ்மிஷன்களில், தங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து கொள்ளலாம்.

டிரைவிங் மோட்கள்;

டிரைவிங் மோட்கள்;

அதிக மைலேஜ் திறனை பெற மினி கூப்பர் கன்வர்டிபிள் கார்கள் மூன்று விதமான டிரைவிங் மோட்களை கொண்டுள்ளது. இவற்றை நீங்கள் வாகனத்தை இயக்கி கொண்டே இருக்கும் போதே கூட மாற்றி கொள்ளலாம்.

(*) ஸ்போர்ட் மோட் ; இறுகிய மற்றும் புத்துணர்ச்சியான சவாரி வழங்கும் வகையில் இஞ்ஜின், ஸ்டீயரிங் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆட்டோமேட்டிகாக மாறி கொள்கிறது.

(*) க்ரீன் மோட் ; இந்த கிரின் மோட்-டில் வாகனத்தை இயக்கும் போது, அது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை நிறுத்தி விடுகிறது. இதன் மூலம் மென்மையான மற்றும் எரிபொருள் திறன்மிக்க வாகனத்தை இயக்க முடியும்.

(*) மிட்-மோட் ; மிட் மோட் என்பது ஸ்போர்ட் மோட் மற்றும் க்ரீன் மோட்-களுக்கு இடையிலான மோட் ஆகும். இதில், மிதமான மோட்டாரிங் அனுபவம் கிடைக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பு அம்சங்கள்;

பாதுகாப்பை பொருத்தவரை, இந்த புதிய கன்வர்டிபிள் கார், அதிக வலிமை கொண்ட யூகேஎல் ஸ்டீல் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டைனமிக் டிராக்‌ஷன் கண்ட்ரோல், எலெக்ட்ரானிேக் டிஃபரன்ஷியல் லாக் கண்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

இந்தியாவில் கிடைக்கும் மாடல்கள்;

இந்தியாவில் கிடைக்கும் மாடல்கள்;

பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின்கள் கொண்ட புதிய மாடல் ஹேட்ச்பேக் கார்களையும் கூட, மினி கூப்பர் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்கிறது. கன்வர்டிபிள் கார்களை, விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டம் செய்துள்ள்னர்.

தற்போதைய நிலையில், மினி கூப்பர், மினி கூப்பர் எஸ், மினி கூப்பர் கன்வர்டிபிள் (இரண்டாம் தலைமுறை), மினி கண்ட்ரிமென் உள்ளிட்ட கார்களை மினி கூப்பர் நிறுவனம் விற்று வருகிறது.

மினி கூப்பர் கன்வர்டிபிள் (மூன்றாம் தலைமுறை) கார் விற்பனை;

மினி கூப்பர் கன்வர்டிபிள் (மூன்றாம் தலைமுறை) கார் விற்பனை;

மினி கூப்பர் கன்வர்டிபிள் (மூன்றாம் தலைமுறை) கார் சர்வதேச சந்தைகளில், மார்ச் 2016 வாக்கில் தான் விற்பனைக்கு வர உள்ளது.

முதல் துவக்கமாக, 2015 டோக்கியோ மோட்டர் ஷோவில் இந்த கார், பொதுமக்களுக்கும் காணும் வகையில் அறிமுகம் செய்கிறது. இது, 2016-ல், இந்தியாவில் நடைபெற உள்ள 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ-வில் கூட காட்சிபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
New Mini Cooper Convertible Car is Unveiled. It is showcased to the general public in the 2015 Tokyo Motor Show. 2015 Tokyo Motor Show is held in Tokyo, Capital of Japan from October 29 to November 8th 2015.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark