இன்னோவாவுக்க சிக்கலை தரும் விலையில் ரெனோ லாட்ஜி அறிமுகம் - விபரம்

By Saravana

இந்தியாவில் புதிய ரெனோ லாட்ஜி எம்பிவி கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சரியான விலை, இடவசதி போன்றவற்றின் மூலம் டொயோட்டா இன்னோவாவுக்கு சரியான போட்டியை தரும் மாடலாக இந்த புதிய ரெனோ லாட்ஜி கார் வந்துள்ளது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அடிப்படை பலம்

அடிப்படை பலம்

இந்த காரின் மிகப்பெரிய பலமே சிறப்பான இடவசதிதான். மாருதி எர்டிகா, ஹோண்டா மொபிலியோ கார்களைவிட மிகச்சிறப்பான இடவசதியை அளிக்கும் என்பதோடு, அதற்கு சரிசமமான விலையில் வந்திருப்பது லாட்ஜிக்கு நிச்சயம் ஒரு இடம் கிடைக்கும் என நம்பலாம்.

வடிவம்

வடிவம்

ரெனோ லாட்ஜி எம்பிவி கார் 4,498மிமீ நீளம், 1,751மிமீ அகலம் கொண்டது. மாருதி எர்டிகா மற்றும் ஹோண்டா மொபிலியோ கார்களை விட நீள, அகலத்தில் அதிகம். இதனால், சிறப்பான இடவசதியை அளிக்கும் எம்பிவி காராக வந்திருக்கிறது.

இருக்கை மாடல்கள்

இருக்கை மாடல்கள்

ரெனோ லாட்ஜி கார் 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் கிடைக்கும். மேலும், 207 லிட்டர் பொருட்களை வைப்பதற்கான பூட்ரூம் வசதி உள்ளது. மூன்றாவது இருக்கையை மடக்கினால், பூட்ரூம் கொள்ளளவை 589 லிட்டராக அதிகரித்துக்கொள்ளலாம்.

 எஞ்சின்

எஞ்சின்

டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் மட்டுமே வந்துள்ளது. டஸ்ட்டரில் இருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 85 பிஎஸ் மற்றும் 110 பிஎஸ் சக்திகொண்ட மாடல்களில் இரு மாடல்களில் கிடைக்கும். 85 பிஎஸ் டீசல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், 110 பிஎஸ் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

ரெனோ லாட்ஜி காரின் 85 பிஎஸ் மாடல் லிட்டருக்கு 21.04 கிமீ மைலேஜையும், 110 பிஎஸ் டீசல் மாடல் லிட்டருக்கு 19.98 கிமீ மைலேஜையும் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

இபிடி., தொழில்நுட்ப வசதியுடன் இணைந்த ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், முன்வரிசைக்கான டியூவல் ஏர்பேக்ஸ், பார்க்கிங் சென்சார்கள், ரியர் வியூ கேமரா, எஞ்சின் இம்மொபைலைசர், கதவுகள் திறந்திருப்பதை எச்சரிக்கும் வசதி ஆகியவை உள்ளன.

டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்

டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை விபரம்

ரெனோ லாட்ஜி 85 பிஎஸ் டீசல் மாடல் விலை

85 PS STD: ரூ. 8,19,000

85 PS RxE: ரூ. 8,99,000

85 PS RxL: ரூ. 9,59,000

85 PS RxZ: ரூ. 10,89,000

ரெனோ லாட்ஜி 110 பிஎஸ் டீசல் மாடல் விலை

110 PS RxL: ரூ. 10,09,000

110 PS RxZ 8-சீட்டர்: ரூ. 11,49,000

110 PS RxZ 7-சீட்டர்: ரூ. 11,79,000

Most Read Articles
English summary
Renault has launched its Lodgy MPV in India on the 9th of April, 2015. This new model is being projected as the next best-seller for the French manufacturer.
Story first published: Thursday, April 9, 2015, 15:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X