மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவிக்கு போட்டியாக வரும் ரெனோ எஸ்யூவி!

Written By:

டஸ்ட்டர் புகழ் ரெனோ நிறுவனம் அடுத்து ஒரு புதிய எஸ்யூவி மாடலை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது.

ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி எஸ் க்ராஸ் போன்ற பல புதிய மாடல்கள் தொடர்ந்து வரிசை கட்டியதால், ரெனோ டஸ்ட்டருக்கான மவுசு குறைந்துவிட்டது. இதையடுத்து, மார்க்கெட் பங்களிப்பை கூட்டிக் கொள்ளும் விதத்தில், புதிய எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ய ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

குறியீட்டுப் பெயர்

குறியீட்டுப் பெயர்

பல புதிய மாடல்களை இந்திய மார்க்கெட்டில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ களமிறக்க திட்டமிட்டு இருக்கிறது. அதில், புதிய 7 சீட்டர் எஸ்யூவி மாடலும் ஒன்று. இந்த புதிய எஸ்யூவி மாடல் HHA என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. மேலும், இது டஸ்ட்டர் எஸ்யூவியைவிட மேலான ரகத்தில், பிரிமியம் மாடலாக இருக்கும்.

டிசைன்

டிசைன்

புதிய ரெனோ க்ளியோ காரின் அடிப்படையில் உருவாக்கப்படும் இந்த எஸ்யூவி மாடல், ரெனோ கேப்டூர் கான்செப்ட் டிசைன் தாத்பரியங்களையும் பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி 500, ஹோண்டா பிஆர் வி எஸ்யூவி மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

வளரும் நாடுகளுக்கானது...

வளரும் நாடுகளுக்கானது...

இந்தியா மட்டுமின்றி, பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த புதிய எஸ்யூவி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

7 சீட்டர்

7 சீட்டர்

டஸ்ட்டர் எஸ்யூவி 5 சீட்டர் மாடலாக இருப்பதால் சிறிய குடும்பத்தினரை மட்டுமே ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது. இந்த நிலையில், புதிய 7 சீட்டர் மாடல் மூலமாக தனது எஸ்யூவி பிரியர்களின் வட்டத்தை விரிவுப்படுத்திக் கொள்ள முடியும் என்று ரெனோ நம்புகிறது.

அறிமுகம்

அறிமுகம்

இந்த புதிய எஸ்யூவி மாடலை 2017ம் ஆண்டு களமிறக்க ரெனோ திட்டமிட்டு இருக்கிறது. இது மட்டுமின்றி, யுட்டிலிட்டி ரகத்தில் மேலும் சில புதிய மாடல்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்ய ரெனோ திட்டமிட்டுள்ளது.

 
English summary
French carmaker is planning to launch a new 7-seater premium SUV in India, codenamed 'HHA', that will rival the Mahindra XUV500, and the upcoming Honda BR-V among others in the league.
Story first published: Saturday, October 17, 2015, 11:46 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark