டாடா நானோ காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

Written By:

பவர் ஸ்டீயரிங் கொண்ட டாடா நானோ காரின் புதிய பேஸ் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

பவர் ஸ்டீயரிங் கொண்ட நானோ ட்விஸ்ட் கார் தற்போது எக்ஸ்டி என்ற வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வதற்கு எளிதாகவும், குறைவான விலை கொண்ட புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

நானோ ட்விஸ்ட் எக்ஸ்இ என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய வேரியண்ட்டில் ஏசி, பவர் ஸ்டீயரிங், கருப்பு நிற டேஷ்போர்டு போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

ஆனால், நானோ ட்விஸ்ட் எக்ஸ்டி வேரியண்ட்டில் கிடைக்கும், ஹீட்டருடன் கூடிய ஏசி சிஸ்டம், மியூசிக் சிஸ்டம், முன்புறத்திற்கான பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங் மற்றும் ரியர் பார்சல் ட்ரே போன்றவை இருக்காது.

English summary

 Tata motors has introduced new variant of Nano Twist car called Nano Twist XE and Priced at Rs 2.06 lakh (ex-showroom, Delhi), the Nano Twist XE is the base trim and sits below the Twist XT.
Story first published: Monday, February 9, 2015, 17:27 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark