புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் அறிமுகம்: படங்கள், தகவல்கள்!

Written By:

டிசைன் மற்றும் வசதிகளில் மேம்படுத்தப்பட்ட புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி ஆஸ்திரேலியாவில் நடந்த நிகழ்ச்சியில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் படங்கள், தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அடிப்படை மாடல்

அடிப்படை மாடல்

டொயோட்டாவின் புதிய ஹைலக்ஸ் பிக்கப் டிரக் அடிப்படையில் இந்த புதிய ஃபார்ச்சூனர் உருவாக்கப்பட்டிருக்கிறது.

டிசைன் அம்சங்கள்

டிசைன் அம்சங்கள்

புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், க்ரோம் பட்டை க்ரில் அமைப்பு, மிரட்டலான பம்பர் ஆகியவை டொயோட்டா ஃபார்ச்சூனரின் முகப்பில் வசீகரிக்க வைக்கிறது. ஹெட்லைட் கண்களில் மிரட்டல் போனாலும், பம்பர் முகப்பு கம்பீரத்தை தூக்கி நிறுத்துகிறது.

அலாய் வீல்கள்

அலாய் வீல்கள்

17 இன்ச் மற்றும் 18 இன்ச் அலாய் வீல்கள் கொண்டதாக கிடைக்கும். நவநாகரீக டிசைனுக்கு மாறிய எல்இடி டெயில் லைட் ஆகியவை குறிப்பிட்டு கூற வேண்டிய அம்சங்கள்.

 வடிவம்

வடிவம்

4,795மிமீ நீளம், 1,855மிமீ அகலம், 1,835மிமீ உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 2,745மிமீ வீல்பேஸ் உட்புறத்தில் சிறப்பான இடவசதியை தரும்.

கிரவுண்ட் கிளியரன்ஸ்

கிரவுண்ட் கிளியரன்ஸ்

இந்த எஸ்யூவி ஆஃப்ரோடு, சாதாரண சாலை என அனைத்திற்கும் ஏற்ற விதத்தில் 225மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.

இன்டிரியர்

இன்டிரியர்

பீஜ் மற்று கருப்பு நிற இன்டிரியர் கொடுக்கப்பட்டுள்ளது. ரியர் ஏசி வென்ட்டுகள், எல்சிடி டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், அதிக ஸ்டோரேஜ் வசதிகளை கொண்டுள்ளது.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியில் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 323 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 180 பிஎஸ் பவரையும், 450 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

கியர்பாஸ் ஆப்ஷன்

கியர்பாஸ் ஆப்ஷன்

புதிய ஃபார்ச்சூனர் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் கிடைக்கும். 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வருகிறது. எஞ்சின்கள் 10 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை தரும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஏர்பேக்குகள் உள்ளிட்ட பல நவீன யுக பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கிறது.

டீசல் டேங்க்

டீசல் டேங்க்

80 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் பொருத்தப்பட்டிருப்பதால், ஆஃப்ரோடு சாகசங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவானதாக இருக்கும்.

இந்தியாவுக்கு..

இந்தியாவுக்கு..

அடுத்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் இந்தியாவில் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் தடம் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
English summary
Japanese car maker Toyota has revealed the new Fortuner in Australia with a launch date set for the end of October. However, the SUV will arrive in India next year - at the 2016 Delhi Auto Expo.
Story first published: Thursday, July 16, 2015, 15:56 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark