புதிய டொயோட்டா இன்னோவா கார் அதிகாரப்பூர்வமாக வெளியீடு... படங்களுடன், விபரங்கள்!

Written By:

வரும் 23ந் தேதி புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா கார் இந்தோனேஷியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில்,

முதல்முறையாக புதிய இன்னோவா காரின் படங்கள், விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கின்றன. அதிக பிரிமியம் கொண்ட மாடலாக மெருகேற்றப்பட்டிருக்கும் புதிய டொயோட்டா இன்னோவா காரின் படங்கள், விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

Toyota New Global Architecture (TNGA) என்ற டொயோட்டா நிறுவனத்தின் புதிய கட்டமைப்பு தாத்பரியத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால், தற்போதைய மாடலைவிட புதிய இன்னோவா காரின் எடை குறைந்திருக்கிறது.

 முகப்பு

முகப்பு

முன்பக்கத்தில் புத்தம் புதிய க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. எல்இடி பகல்நேர விளக்குகள் சேர்க்கப்பட்டிருப்பதுடன், ஹெட்லைட் டிசைனும் புதிதாக மாறியிருக்கிறது.

பின்புறம்

பின்புறம்

பக்கவாட்டில் புதிய வீல் ஆர்ச்சுகள், பின்புறத்தில் புதிய டிசைனிலான டெயில் லைட்டுகள் மற்றும் புதிய பம்பர் ஆகியவை டொயோட்டா இன்னோவாவை புதிய தலைமுறை காராக தோற்றத்தில் மாற்றியிருக்கின்றன.

புதிய டொயோட்டா இன்னோவா கார் அதிகாரப்பூர்வமாக வெளியீடு!

எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட், 16 இன்ச் மற்றும் 17 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி பகல்நேர விளக்குகள் போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

 இன்டீரியர்

இன்டீரியர்

வெளிப்புறத்தைவிட உட்புறத்தில்தான் மெச்சத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உட்புற வடிவமைப்பு முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. புதிய டேஷ்போர்டு அமைப்பை பெற்றிருக்கிறது.

வெளிப்புறத்தைவிட உட்புறத்தில்தான் மெச்சத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உட்புற வடிவமைப்பு முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. புதிய டேஷ்போர்டு அமைப்பை பெற்றிருக்கிறது.

வெளிப்புறத்தைவிட உட்புறத்தில்தான் மெச்சத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உட்புற வடிவமைப்பு முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. புதிய டேஷ்போர்டு அமைப்பை பெற்றிருக்கிறது.

ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், வாய்ஸ் கமாண்ட் கன்ட்ரோல், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், புளுடூத் மற்றும் யுஎஸ்பி கனெக்ட்டிவிட்டி வசதி கொண்ட டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கின்றன.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

இந்தோனேஷியாவில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் வருகிறது.

பெட்ரோல் எஞ்சின் பவர் விபரம்

பெட்ரோல் எஞ்சின் பவர் விபரம்

பெட்ரோல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சினஅ அதிகபட்சமாக 137 பிஎச்பி பவரையும், 183 என்எம் டார்க்கையும் வழங்கும்.

டீசல் எஞ்சின் பவர் விபரம்

டீசல் எஞ்சின் பவர் விபரம்

டீசல் மாடலில் இருக்கும் 2.4 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 147 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க்கையும் வழங்கும்.

கியர்பாக்ஸ்

கியர்பாக்ஸ்

பெட்ரோல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலிலும், டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

கர்ட்டெயின் ஏர்பேக்குகள், சைடு ஏர்பேக்குகள், முழங்கால் பாதுகாப்புக்கான ஏர்பேக்குகள், முன்பக்கத்தில் டியூவல் எஸ்ஆர்எஸ் ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் உள்ளது. ஹில் அசிஸ்ட், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் டாப் வேரியண்ட்டில் கிடைக்கிறது.

வடிவம்

வடிவம்

நீளம்: 4,735மிமீ

அகலம்: 1,830மிமீ

உயரம்: 1,795மிமீ

வீல்பேஸ்: 2,750மிமீ

வண்ணங்கள்

வண்ணங்கள்

இந்தோனேஷியாவில், அலுமினா ஜாட், அட்டிடியூட் பிளாக், அவான்த் கார்டே பிரான்ஸ், டார்க் கிரே மைக்கா மெட்டாலிக், சில்வர் மெட்டாலிக், சூப்பர் ஒயிட் ஆகிய வண்ணங்களில் வருகிறது.

இந்திய பிரவேசம்

இந்திய பிரவேசம்

வரும் 23ந் தேதி இந்தோனேஷியாவில் அறிமுகமாகும் புதிய டொயோட்டா இன்னோவா கார், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

அதிக பிரிமியம் மாடலாக மாறியிருக்கும் புதிய டொயோட்டா இன்னோவா கார் இந்தியாவில் ரூ.12 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
English summary
New Toyota Innova Official Images Revealed.
Story first published: Friday, November 13, 2015, 17:14 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark