லிட்டருக்கு 40 கிமீ மைலேஜ் தரும் புதிய டொயோட்டா பிரையஸ் கார்!

Written By:

புதிய தலைமுறை டொயோட்டா பிரையஸ் கார் லிட்டருக்கு 40 கிமீ வரை மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் ஹைபிரிட் எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட கார் மாடல் டொயோட்டா பிரையஸ். குறைபான மாசு வெளியிடும் தன்மை மற்றும் அதிக மைலேஜ் தரும் காராக இருப்பதால், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாடல் என்ற பெருமையுடன் விற்பனையில் இருக்கிறது.

அத்துடன், பல்வேறு நாடுகளில் இந்த காருக்கு சிறப்பு மானியமும் வழங்கப்படுகிறது. இந்தநிலையில், விரைவில் நான்காம் தலைமுறையாக வெளியிடப்பட இருக்கும் புதிய டொயோட்டா பிரையஸ் ஹைபிரிட் கார் பற்றிய சில முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை ஸ்லைடரில் காணலாம்.

பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

டொயோட்டா நிறுவனத்தின் புதிய டிஎன்ஜிஏ கட்டமைப்பில் இந்த புதிய தலைமுறை பிரையஸ் கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சேஸீ 60 சதவீதம் அளவுக்கு கூடுதல் உறுதித்தன்மை கொண்டதாகவும், எடை குறைவாகவும் இருக்கும். இதன்மூலம், சிறப்பான கையாளுமையை வழங்கும்.

 எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

புதிய டொயோட்டா பிரையஸ் காரில் மேம்படுத்தப்பட்ட 1.8 லிட்டர் விவிடி ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. எஞ்சினில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மூலமாக, 18 சதவீதம் வரை கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை தரும் என்கிறது டொயோட்டா. மேலும், எஞ்சினின் எரி சக்தி திறனும் 40 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு கூலண்ட் சிஸ்டம் மூலமாக, எஞ்சினுக்கு கூலண்ட் செல்லும் அளவு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு, எஞ்சினின் எரிசக்தி திறன் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

எஞ்சின் பவர்

எஞ்சின் பவர்

இந்த காரில் இருக்கும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 97 பிஎச்பி பவரையும், 142 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இதனுடன் இணைந்து செயலாற்றும் மின் மோட்டார் அதிகபட்சமாக 73 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. மேலும், இந்த மின் மோட்டாரின் உள் கட்டமைப்பு உராய்வுத் தன்மை மிக குறைவாக இருக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

மைலேஜ்

மைலேஜ்

புதிய டொயோட்டா பிரையஸ் கார் லிட்டருக்கு 40 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் மாடல் 32.6 கிமீ மைலேஜ் தருவதாக தெரிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி

பேட்டரி

புதிய டொயோட்டா பிரையஸ் காரில், பின்புற இருக்கைக்கு கீழே நிக்கல் மெட்டல் [NiMH] பேட்டரி பொருத்தப்படடு இருக்கிறது. இதன்மூலம், காரின் எடை விரவல் அளவு மிகச் சிறப்பாக இருப்பதால், சிறந்த கையாளுமையையும், நிலைத்தன்மையையும் வழங்கும்.

 பூட் ரூம்

பூட் ரூம்

இந்த காரில் 502 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் இருக்கிறது. துணை பேட்டரிகள் தற்போது எஞ்சின் அமைவிட பகுதிக்கு மாற்றப்பட்டிருப்பதால், பொருட்கள் வைப்பதற்கு போதுமான இடவசதியை வழங்குகிறது..

அறிமுகம்

அறிமுகம்

இந்த மாத இறுதியில், டொயோட்டாவின் தாயகமான ஜப்பானில் நடைபெற இருக்கும் டோக்கியோ நகர சர்வதேச வாகன கண்காட்சியில் இந்த புதிய தலைமுறை டொயோட்டா பிரையஸ் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில், முதலாவதாக ஜப்பான் மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இந்தியாவுக்கு...

இந்தியாவுக்கு...

அடுத்த ஆண்டு இந்தியாவில் இந்த புதிய தலைமுறை டொயோட்டா பிரையஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், லிட்டருக்கு 40 கிமீ மைலேஜ் என்பது ஜப்பான் மார்க்கெட்டிற்காக மட்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது கவனிக்கத்தக்கது.

 
English summary
Japanese car maker Toyota Motor Corp has revealed, the fourth-generation Prius hybrid model would have listed mileage of 40 km per litre (94 mpg) in Japan, improving fuel economy by more than a fifth from the current version's 32.6 km/l.
Story first published: Wednesday, October 14, 2015, 11:08 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark