சொக்குதே மனம்... செப்டம்பரில் இந்தியா வரும் புதிய வால்வோ எக்ஸ்சி90!

Written By:

வரும் செப்டம்பர் மாதம் புதிய வால்வோ எக்ஸ்சி90 சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

கடந்த ஆண்டு சர்வதேச அளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய தலைமுறை வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதன் அறிமுகத்தை கொண்டாடுவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ஃபர்ஸ்ட் எடிசன் மாடல் வெறும் 47 மணிநேரத்தில் விற்று தீர்ந்தது.

இந்த நிலையில், இந்த புதிய மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதை வால்வோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தாமஸ் எர்ன்பெர்க் உறுதி செய்துள்ளார். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 நீண்ட இடைவெளி

நீண்ட இடைவெளி

முதலாம் தலைமுறை வால்வோ எக்ஸ்சி90 மாடல் அறிமுகம் செய்யப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது இரண்டாம் தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

 பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

Scalable Product Architecture(SAC) என்ற புதிய பிளாட்ஃபார்மில் இந்த புதிய வால்வோ எக்ஸ்சி90 கிராஸ்ஓவர் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிளாட்ஃபார்மின் அடிப்படையில் புதிய தலைமுறை வால்வோ கார்கள் வடிவமைக்கப்படும்.

இருக்கை அமைப்பு

இருக்கை அமைப்பு

புதிய வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவி 3 வரிசை இருக்கை அமைப்பு கொண்டது. 7 பேர் அமர்ந்து பயணிக்கலாம்.

புதிய டிசைன்

புதிய டிசைன்

முற்றிலும் புதிய முகப்பு டிசைன் வெகுவாக கவரும் வகையில் இருக்கிறது. குறிப்பாக, பகல்நேர ரன்னிங் விளக்குகள், எல்இடி ஹெட்லைட்ஸ், புதிய கிரில் டிசைன் போன்றவை காருக்கு புதுமையை தருகிறது. 22 இஞ்ச் அலாய் வீல்கள் கூடுதல் கம்பீரத்தை தருகின்றன.

இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியரும் நவீனத்துவம் தாண்டவமாடுகிறது. கசமுசா என இல்லாமல் சுவிட்சுகள் எண்ணிக்கையை சென்டர் கன்சோலில் வெகுவாக குறைத்திருக்கிறது. டேப்லெட் கம்ப்யூட்டர் போன்று இருக்கும் சென்டர் கன்சோல் தொடுதிரை மூலமாக பல்வேறு வசதிகளை இயக்க முடியும். நேவிகேஷன், மியூசிக் சிஸ்டம், மொபைல்போன் மற்றும் ஆம்பிளிஃபயர் என நான்கு பகுதிகளாக தொடுதிரை பிரிக்கப்பட்டு எளிதாக இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

பிஎம்டபிள்யூ எக்ஸ்5, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல், எம்எல், லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் டொயோட்டா லேண்ட்க்ரூஸருக்கு போட்டியாக இருக்கும். ஆனால், இதற்கு நேர் எதிரியாக ஆடி க்யூ7 எஸ்யூவியை கூறலாம்.

 
English summary
New Volvo XC90 Luxury SUV To Be Launched in India by September This Year.
Story first published: Saturday, March 21, 2015, 10:17 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark