புதிய டொயோட்டா இன்னோவா காரின் தொழில்நுட்ப விபரங்கள் கசிந்தது!

Posted By:

அடுத்த மாதம் 23ந் தேதி புதிய தலைமுறை டொயோட்டா இன்னோவா கார் சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய டொயோட்டா இன்னோவா காரின் தொழில்நுட்ப விபரங்கள் கசிந்துள்ளன.

இரண்டாம் தலைமுறை மாடலாக வர இருக்கும் புதிய டொயோட்டா இன்னோவா காரை வரும் பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்தியர்கள் தரிசனம் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் இந்தோனேஷியாவுக்கான தகவல் குறிப்பேட்டு விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

வடிவம்

வடிவம்

புதிய டொயோட்டா இன்னோவா கார் 4,735மிமீ நீளம், 1,830மிமீ அகலம், 1,795மிமி உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 2,750மிமீ வீல் பேஸ் கொண்டிருப்பதால், உட்புறத்தில் மிக சிறப்பான இடவசதியை அளிக்கும். குறிப்பாக, மூன்றாவது வரிசை இருக்கையில் அமர்பவர்களுக்கு சிரமமில்லாத உணர்வை தரும்.

எஞ்சின்

எஞ்சின்

பெட்ரோல் மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 139 பிஎஸ் பவரையும், டீசல் மாடலில் இருக்கும் 2.4 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 149 பிஎஸ் பவரையும் வழங்கும். இந்தோனேஷியாவில், பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

தோற்றம்

தோற்றம்

முகப்பு முற்றிலுமாக புதிய தோற்றத்திற்கு மாறியிருக்கிறது ஹெட்லைட்டுடன் இணைந்து செல்லும் இரண்டு முரட்டுத்தனமான குரோமிய பூச்சு பட்டைகள் கொண்ட க்ரில் அமைப்பு, புதிய பம்பர், புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல் நேர விளக்குகள், என்று புதிய தலைமுறைக்கு முற்றிலுமாக மாறியிருக்கிறது நம் மனம் கவர்ந்த டொயோட்டா இன்னோவா.

இன்டிரியர்

இன்டிரியர்

டேஷ்போர்டு அமைப்பும் முற்றிலும் புதிது. இரட்டை வண்ணக் கலவையிலான டேஷ்போர்டு, சில்வர் மற்றும் மர வேலைப்பாடுகளுடன் இன்னும் கொஞ்சம் பிரிமியம் காராக மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் சிஸ்டம் போன்றவையும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.

சஸ்பென்ஷன்,சக்கரங்கள்

சஸ்பென்ஷன்,சக்கரங்கள்

முன்புறத்தில் காயில் ஸ்பிரிங்குடன் கூடிய டபுள் விஷ்போன் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் காயில் ஸ்பிரிங்குடன் கூடிய 4 லிங்க் சஸ்பென்ஷன் அமைப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. விலை குறைவான மாடல்களில் 16 இன்ச் சக்கரங்களும், டாப் வேரியண்ட்டில் 17 இன்ச் சக்கரங்களும் இடம்பெற்றிருக்கம்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணிக்கான டியூவல் ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் எனப்படும் சக்கரங்களுக்கு சரியான விகிதத்தில் பவரை செலுத்தும் தொழில்நுட்பம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், திருட்டு எச்சரிக்கை அலாரம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கிறது.

அறிமுகம்

அறிமுகம்

அடுத்த மாதம் 23ந் தேதி சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய டொயோட்டா இன்னோவா கார், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்தியர்களுக்கு தரிசனம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
English summary
Next gen Toyota Innova brochure Leaked.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark