5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் வரும் புதிய தலைமுறை வேகன் ஆர்!

By Saravana

5 பேர் மற்றும் 7 பேர் பயணிக்கும் இருக்கை அமைப்பு கொண்ட இரு மாடல்களில் புதிய தலைமுறை வேகன் ஆர் காரை மாருதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

YCA என்ற குறியீட்டுப் பெயரில் இந்த புதிய வேகன் ஆர் காரை வடிவமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 7 சீட்டர் மாடல் டட்சன் கோ ப்ளஸ் காரைப் போன்று மினி எம்பிவி மாடலாக இருக்கும்.

Maruti Wagon R

இந்த புதிய தலைமுறை வேகன் ஆர் கார் 2017ம் ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் உற்பத்தி துவங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அந்த ஆண்டு மத்தியிலிருந்து விற்பனைக்கு கிடைக்கும்.

மேலும், புதிய வேகன் ஆர் மாடல்கள் குஜராத்தில் அமைக்கப்படும் சுஸுகியின் புதிய கார் ஆலையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அடுத்து ஒரு விசேஷம், இந்த புதிய வேகன் ஆர் கார் டீசல் மாடலிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்பதாகும்.

அத்துடன் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டதாகவும் இருக்கும். புதிய தலைமுறை வேகன் ஆர் கார் மூலம் சிறிய ரக கார் மார்க்கெட்டில் புதிய ஆட்டத்தை துவங்குவதற்கு மாருதி திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Most Read Articles
English summary
The YCA project is actually the next-gen Wagon R, which will be introduced in India by mid-2017. It will be offered in two versions a 5-seater and a 7-seater will be available. We believe the Japanese manufacturer has taken inspiration from Datsun's Go and Go+ model for their next-gen Wagon 
Story first published: Tuesday, January 6, 2015, 14:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X