லம்போர்கினியின் புதிய சூப்பர் கார் மாடல் பற்றிய விபரங்கள்!

Written By:

சூப்பர் கார் தயாரிப்பில் புகழ்பெற்ற இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி நிறுவனம் புதிய சூப்பர் கார் மாடல் ஒன்றை வெளியிட இருக்கிறது.

குறைவான எண்ணிக்கையில், மிகவும் ஸ்பெஷலான மாடலாக வர இருக்கும் இந்த புதிய கார் பற்றியத் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய லம்போ

புதிய லம்போ

லம்போர்கினி சென்டினரியோ LP 770-4 என்பதுதான் புதிய காரின் பெயர். சென்டினரி என்ற நூற்றாண்டை குறிக்கும் வகையிலேயே, இந்த காருக்கு பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 சிறப்பு பதிப்பு

சிறப்பு பதிப்பு

லம்போர்கினி நிறுவனத்தை ஸ்தாபிதம் செய்த மறைந்த பெருஷியோ லம்போர்கினியின் நூறாவது பிறந்தநாளை கொண்டாடும் வகையிலேயே, இந்த கார் மிகவும் பிரத்யேகமான மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

மொத்தம் 20 லம்போர்கினி சென்டினரியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. அதேநேரத்தில், லம்போர்கினி வெனினோ அளவுக்கு விலை இருக்காது என்று நம்பலாம்.

எஞ்சின்

எஞ்சின்

லம்போர்கினி அவென்டேடார் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும், அதே 6.5 லிட்டர் வி12 எஞ்சின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட இருக்கிறது. அதிகபட்சமாக 770 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

செயல்திறன்

செயல்திறன்

இந்த புதிய லம்போர்கினி கார் 0- 100 கிமீ வேகத்தை 2.7 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக 350 கிமீ வேகத்தில் செல்லக்கூடியதாக இருக்கும்.

அறிமுகம் மற்றும் விலை

அறிமுகம் மற்றும் விலை

அடுத்த ஆண்டு ஏப்ரல் 19ந் பெருஷியோ லம்போர்கினியின் நூறாவது பிறந்தநாளின்போது விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். 1.12 மில்லியன் டாலர் விலையில் இந்த புதிய கார் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பு: ஸ்லைடரில் லம்போர்கினி வெனினோ படங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

 
English summary
There is a bit of news about Lamborghini's upcoming supercar. For one, it will be called Centenario LP 770-4. Two, it will be available in very limited numbers.
Story first published: Saturday, September 5, 2015, 13:37 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark