ஐ.சி.சி.,யின் சர்வதேச ஸ்பான்சராக நிசான் கார் நிறுவனம் ஒப்பந்தம்!

By Ravichandran

நிஸ்ஸான் நிறுவனம் ஐ.சி.சி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உலகளாவிய ஸ்பான்ஸராகியுள்ளது.

நிஸ்ஸான் நிறுவனம் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பிரபலமான கார் நிறுவனமாக விளங்குகிறது.

நிஸ்ஸான் நிறுவனம் நிஸ்ஸான் மற்றும் டாட்சன் என்ற பெயர்களில் கார்கள் தயாரிக்கிறது. அது ஹாட்ச்பேக், எம்.யூ.வி, எஸ்.யூ.வி மற்றும் செடான் உள்ளிட்ட ரகங்களில் பல கார்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி கொண்டிருக்கிறது.

நிஸ்ஸான் நிறுவனம் உலக அளவில் விளையாட்டுத்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகிறது. இந்நிறுவனம், யூஏஃபா சாம்பியன்ஸ் லீக், 2016 ஒலிம்பிக் விளையாட்டுகள், பாரலிம்பிக் விளையாட்டுகளை வழங்கி வருகிறது. மேலும், கிரேட் பிரட்டனின் ஒலிம்பிக் அணி, மெக்சிகோவின் ஒலிம்பிக் அணி, பிரேசிலின் ஒலிம்பிக் அணி, ஹீய்ஸ்மேன் டிராஃபி உள்ளிட்டவற்றிற்கும் ஸ்பான்ஸராக விளங்குகிறது.

nissan enters partnership deal with icc

அதன் தொடர்ச்சியாக, தற்போது ஐ.சி.சி-யுடனும் இணைந்து அதன் உலகளாவிய ஸ்பான்சராக மாறியுள்ளது. ஐ.சி.சி நிகழ்வுகளுக்கு ஸ்பான்சராக விளங்கும் இந்த ஏற்பாடு தற்போது முதல் 2023-ஆம் வரை தொடரும். இதன்படி, ஐ.சி.சி நடத்தும் ஐ.சி.சி கிரிக்கெட் உலக கோப்பை, ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராஃபி, ஐ.சி.சி. வேர்ல்ட் ட்வெண்டி20, அண்டர்-19 எனப்படும் 19 வயதிற்குட்பட்டோருக்கான தொடர்கள், மகளிர் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் தகுதி ஆட்டங்கள் என அனைத்திற்கும் நிஸ்ஸான் ஸ்பான்சராக விளங்கும்.

நிஸ்ஸான் நிறுவனம் மற்றும் ஐ.சி.சி முறைப்படி இணைந்ததற்கான நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஐ.சி.சி-யின் தலைமை அதிகாரியான டேவ் ரிச்சர்ட்ஸன், நிஸ்ஸான் மோட்டர் இந்தியாவின் எம்.டி-யான அருன் மல்ஹோத்ரா, அதன் உயர் அதிகாரிகளான கில்லோம் சிக்கார்ட், ரோயல் டி வ்ரீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஐ.சி.சி-யுடன் கை கோர்த்துக்கொண்டுள்ளதை பற்றி நிஸ்ஸானின் உயர் அதிகாரி கில்லோம் சிக்கார்ட் பெருமிதம் வெளிபடுத்தினார். இந்தியாவில், கிரிகெட் வெறும் விளையாட்டு மட்டும் அல்ல. அது ஏராளமானோரின் வாழ்க்கை முறையாகவும் உள்ளது என கில்லோம் கூறினார்.

மேலும், 2020-ஆம் ஆண்டிற்குள், இந்தியாவின் வாகன சந்தையில் குறைந்தது 5 சதவிகிததிற்கான இடத்தை கட்டாயம் பிடிக்க வேண்டும். ஐரோப்பா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கண்ட வெற்றியை, இந்தியாவிலும் அடைவதே முக்கியமான குறிக்கோள் என கில்லோம் தெரிவித்தார்.

Most Read Articles
English summary
Nissan becomes global sponsor for ICC till 2023, which includes ICC Cricket World Cup and World Twenty20 tournaments also.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X