பைசாவுக்கு பிரயோஜனமில்லை... உதவாக்கறைக்கு கும்பிடு போடும் நிசான்!

Written By:

விற்பனை படுமோசமாக இருந்து வரும் நிசான் எவாலியா உற்பத்தி இந்தியாவில் நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஆட்டோகார் புரோபஷனல் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியில், சென்னை ஆலையில் நிசான் எவாலியா உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டதாக தெரரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை

விற்பனை

கடந்த 2012ம் செப்டம்பர் மாதம் நிசான் எவாலியா இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மஹிந்திரா ஸைலோ மற்றும் டொயோட்டா இன்னோவாவுக்கு போட்டியாளராக நிலை நிறுத்தப்பட்டது. ஆனால், எதிர்பார்த்தபடி, இந்திய மார்க்கெட்டில் நிசான் எவாலியா விற்பனை அமையவில்லை. ஆரம்பம் முதலே விற்பனையில் சொதப்பி வந்தது.

சொற்ப எண்ணிக்கை

சொற்ப எண்ணிக்கை

விற்பனையை அறிமுகம் செய்வதற்காக நிசான் எவாலியா கூடுதல் வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டது. அப்படியிருந்தும், விற்பனையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுவரை வெறும் 2,412 எவாலியா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இதனால், கடும் அதிருப்தி அடைந்த நிசான் எவாலியா உற்பத்தியை நிறுத்திவிட்டது.

ஏமாந்த அசோக் லேலண்ட்

ஏமாந்த அசோக் லேலண்ட்

நிசான் எவாலியா மட்டுமில்லை. கடந்த 2013ம் ஆண்டு எவாலியா அடிப்படையில் தனது முதல் பயணிகள் கார் மாடலை அசோக் லேலண்ட் ஸ்டைல் பெயரில் அறிமுகம் செய்தது. ஆனால், அந்த காரை ரீபேட்ஜ் செய்ததற்கான முதலீட்டை பெறுவதற்கே வழியில்லாத நிலையில், கடந்த மாதம் ஸ்டைல் உற்பத்தியை நிறுத்துவதாக அசோக் லேலண்ட் அறிவித்தது. மொத்தமாகவே 1,134 ஸ்டைல் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, தற்போது எவாலியா உற்பத்தியும் நிறுத்தப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நம்பகமான எஞ்சின்

நம்பகமான எஞ்சின்

வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெற்ற ரெனோவின் 1.5 லிட்டர் கே9கே எஞ்சின்தான் எவாலியா மற்றும் ஸ்டைல் கார்களில் பயன்படுத்தப்பட்டிருந்தன. எவாலியா எஞ்சின் அதிகபட்சமாக 85 பிஎச்பி பவரையும், ஸ்டைல் எஞ்சின் 75 பிஎச்பி பவரையும் அளிக்கும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டிருந்தன. ஆனால், இந்த காரின் டிசைன்தான் வாடிக்கையாளர்களை கவரவில்லை. விற்பனை மோசமடைந்ததற்கு அட்டைப்பெட்டி போன்ற இதன் டிசைன்தான் காரணமாகிவிட்டது.

 வேறு மாடல்

வேறு மாடல்

எம்பிவி கார்களுக்கு இந்திய மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே, புதிய எம்பிவி கார் மாடலை நிசான் அறிமுகம் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை நிசானிடமிருந்து வரவில்லை.

 
English summary
The Japanese manufacturer Nissan has now concluded production of new Evalia models in India. Nissan will eventually clear its stock and is most likely to discontinue this MPV from the market.
Story first published: Saturday, June 27, 2015, 10:26 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark