ஏற்றுமதியில் புதிய மைல்கல்லை எட்டிய நிசான் இந்தியா!

By Saravana

சென்னை ஆலையிலிருந்து 5 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்து புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது நிசான் கார் நிறுவனம்.

சென்னை அருகேயுள்ள ஒரகடத்தில் உற்பத்தி செய்யப்படும் நிசான் கார்கள் 106 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நிசான் ஏற்றுமதி

இந்த ஆலையிலிருந்து உற்பத்தியாகும் 60 சதவீதம் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீதமுள்ள 40 சதவீதம் கார்களே நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், ஏற்றுமதி துவங்கி 5 ஆண்டுகளில் 5 லட்சம் கார்களை சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது நிசான் கார் நிறுவனம்.

அந்த நிறுவனத்தின் மைக்ரா கார்தான் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட மாடல். மேலும், இந்தியாவின் கார் ஏற்றுமதியில் ஹூண்டாய்க்கு அடுத்து இரண்டாவது இடத்தை நிசான் வகிக்கிறது.

நிசான் மைக்ரா கார்தான் இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதியாகும் கார் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #நிசான் #nissan
English summary
Nissan's Micra is their most highly exported vehicle from India. They have now achieved a milestone by exporting their 5,00,000th vehicle from their Chennai facility.
Story first published: Thursday, May 28, 2015, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X