நிசான் மற்றும் டட்சன் கார்களுக்கு அதிரடி தள்ளுபடி சலுகைகள் - விபரம்

Written By:

பண்டிகை காலத்தையொட்டி, நிசான் மற்றும் டட்சன் கார்களுக்கு அதிரடி தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன.

சிறப்புச் சலுகைகள், தள்ளுபடி என நிசான், டட்சன் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சிறப்புச் சலுகைகள் நிச்சயம் உதவும் என்று நம்பலாம். சிறப்புத் தள்ளுபடி விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

நிசான் டெரானோ

நிசான் டெரானோ

நிசான் டெரானோ எஸ்யூவியின் குறிப்பிட்ட வேரியண்ட்டுகளுக்கு அதிகபட்சமாக ரூ.95,000 வரை சேமிக்கும் வாய்ப்பை பெற முடியும். தங்க நாணயம், பிளாபங்கட் டேஷ் இன் நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் ரூ.30,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகைகள் இதில் அடங்கும்.

நிசான் சன்னி

நிசான் சன்னி

நிசான் சன்னி காருக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரை சேமிப்பை பெற வழி இருக்கிறது. இதில், ரூ.10,000 மதிப்பிற்கு இலவச ஆக்சஸெரீகள் மற்றும் ரூ.30,000 மதிப்புடைய எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவை அடங்கும்.

நிசான் மைக்ரா

நிசான் மைக்ரா

நிசான் மைக்ரா மற்றும் மைக்ரா ஆக்டிவ் கார்களின் குறிப்பிட்ட வேரியண்ட்டுகளுக்கு, அதிகபட்சமாக ரூ.45,000 வரையிலான சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.5,000 மதிப்புக்கு ஆக்சஸெரீகள், ரூ.20,000 மதிப்புடைய எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவை அடங்கும்.

 டட்சன் கோ

டட்சன் கோ

டட்சன் கோ காருக்கு ரூ.22,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். மேலும், ஏ வேரியண்ட்டில் பவர் ஸ்டீயரிங் மற்றும் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கிறது.

டட்சன் கோ ப்ளஸ்

டட்சன் கோ ப்ளஸ்

டட்சன் கோ ப்ளஸ் மினி எம்பிவி காருக்கு ரூ.25,000 வரையிலான சிறப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும். வரும் 31ந் தேதி வரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சிறப்புச் சலுகைகள் பொருந்தும்.

 
English summary
Japanese car maker Nissan has announced a host of attractive offers across its range of vehicles including Datsun cars.
Story first published: Saturday, October 10, 2015, 12:27 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark