ஆஃப்ரோடில் நிசான் பேட்ரோல் பராக்கிமம் எப்படி? ஃபர்ஸ்ட் டிரைவ் அனுபவம்!

Written By:

மத்திய கிழக்கு நாடுகளில் நிசான் நிறுவனம் விற்பனை செய்து வரும் பேட்ரோல் சொகுசு எஸ்யூவி அங்கு பெரும் வரவேற்பை பெற்ற மாடல். இந்த எஸ்யூவி மாடல் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை டெல்லி புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடந்த நிசான் நிறுவனத்தின் 10 ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது இந்த சொகுசு எஸ்யூவியை ஓட்டி பார்க்கும் வாய்ப்பை டிரைவ்ஸ்பார்க் தளம் பெற்றது. இந்த எஸ்யூவியை ஓட்டிய அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

01.மாடல்

01.மாடல்

டெல்லி நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட நிசான் பேட்ரோல் எஸ்யூவி இடதுபக்க டிரைவிங் கொண்ட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல். இந்த நிகழ்ச்சிக்காக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தது.

02.டிசைன்

02.டிசைன்

ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற ஓர் திடகாத்திரமான சொகுசு எஸ்யூவி மாடல். முந்தைய தலைமுறை மாடலைவிட பல்வேறு விதத்திலும் டிசைனில் பல படிகள் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. நிசான் நிறுவனத்தின் ட்ரேட்மார்க் க்ரோம் க்ரில் அமைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பகல்நேர விளக்குகளுடன் கூடிய ஹெட்லைட் டிசைன் கவர்ச்சியாக உள்ளது. பனிவிளக்குகள் அறையில் சில்வர் பூச்சு கொடுக்கப்பட்டிருக்கிறது. சிம்பிளாகவும், கம்பீரமாகவும் இருக்கிறது. இந்த எஸ்யூவி லேடர் ஆன் ஃப்ரேமில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

03.இன்டிரியர், வசதிகள்

03.இன்டிரியர், வசதிகள்

சொகுசான லெதர் இருக்கைகள், லெதர் அப்ஹோல்ஸ்டரி கொடுக்கப்பட்டிருந்தது. 7 பேர் இருக்கை அமைப்பு கொண்டது. சேட்டிலைட் நேவிகேஷன் சிஸ்டம் உள்ளதால், திக்கு தெரியாத இடங்களிலிருந்து எளிதாக வெளிவர முடியும். காரை சுற்றிலும் கண்காணிப்பை வழங்கும் ஆல் ரவுண்ட் கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்று, எண்ணற்ற வசதிகள் உள்ளன.

04.எஞ்சின்

04.எஞ்சின்

இந்த எஸ்யூவியில் பொருத்தப்பட்டிருக்கும் 400 எச்பி பவரையும், 559என்எம் டார்க்கையும் வழங்கும் 5.6 லிட்டர் வி8 எஞ்சின் மிகச்சிறப்பான செயல்திறனை வெளிக்காட்டுகிறது.

05.சஸ்பென்ஷன்

05.சஸ்பென்ஷன்

இந்த மெகாசைஸ் எஸ்யூவியை இதன் சிறப்பான லாங் டிராவல் சஸ்பென்ஷன் அமைப்பு எளிதான கையாளுமை வழங்க துணை புரிகிறது. ஆஃப்ரோடுகளை அனாயசமாக எதிர்கொள்கிறது. இதனாலேயே, துபாய் உள்ளிட்ட நாடுகளில் நடக்கும் டெசர்ட் சஃபாரிக்கு இது மிகவும் விரும்பப்படுகிறது. எந்தவொரு சாலையிலும் சிறப்பான கையாளுமையை வழங்கும்.

06. கையாளுமை

06. கையாளுமை

ஹைட்ராலிக் பாடி மோஷன் கன்ட்ரோல் சிஸ்டம் இருப்பதால், குறைவான வேகம், அதிவேகம் என இரண்டிலும் சிறப்பான கையாளுமையை கொடுக்கும். ஆஃப்ரோடு டிராக்கில் 45 டிகிரி கோணத்தில் கூட சிறப்பான நிலைத்தன்மையுடன் பயணிக்கிறது.

 07. ஆஃப்ரோடு

07. ஆஃப்ரோடு

செயற்கையாக அமைக்கப்பட்டிருந்த ஆஃப்ரோடு டிராக் தவிர்த்து, இயற்கையான மண்மேடுகள் நிறைந்த சாலைகளிலும் இந்த எஸ்யூவியை ஒரு கை பார்க்க முடிந்தது. ஆனால், எந்த ஆஃப்ரோடையும் பற்றி பேட்ரோல் கவலைப்படவில்லை. செங்குத்தான மண்மேடுகள், மணல் நிறைந்த சாலைகளில் இந்த 4 வீல் டிரைவ் சிஸ்டம் சிறப்பாகவே கைகொடுத்தது. குறிப்பாக, Sand Mode- ஐ தேர்வு செய்துவிட்டால் போதுமானது. அதற்கு தகுந்தவாறு செல்கிறது.

 08. முக்கிய வசதிகள்

08. முக்கிய வசதிகள்

இந்த எஸ்யூவியில் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் பிரேக் டிஸ்ட்ரிபியூஷன் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், கிராஷ் சென்சிட்டிவ் ஆட்டோமேட்டிக் அன்லாக் சிஸ்டம், ஆட்டோ ஹசார்டு லைட்டிங், லேன் டிபார்ச்சர் சிஸ்டம் என ஏராளமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன. இதனால், ஓட்டுனருக்கு பெரிய வேலை இருக்காது.

09. போட்டியாளர்

09. போட்டியாளர்

இந்தியாவில் நிசான் பேட்ரோல் விற்பனைக்கு வந்தால், நேர் போட்டியாளர் டொயோட்டாவின் லேண்ட்க்ரூஸர் மாடல்தான்.

10.வெற்றி பெறுமா?

10.வெற்றி பெறுமா?

இறக்குமதி செய்து நிசான் நிறுவனம் விற்பனை செய்த எக்ஸ்-ட்ரெயில் மற்றும் 350இசட் கார்கள் வெற்றி பெறவில்லை. இந்த புதிய பேட்ரோல் எஸ்யூவியும் இறக்குமதி செய்துதான் விற்பனை செய்யப்படும். எனவே, இறக்குமதி வரியை சேர்ந்த ரூ.1 கோடி விலை பட்டியலில் இந்த மாடல் வரும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த எஸ்யூவிக்கு எவ்வாறு வரவேற்பு இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால், நிசான் பிராண்டுக்கு ஓர் நன்மதிப்பை ஏற்படுத்தித் தர வல்ல மாடல் என்பதை மறுக்க முடியாது.

 
English summary
The Nissan Patrol was imported from the Middle East, as that has been and is the biggest market for the Patrol over a long period of time. They were left hand drive vehicles, with auto-transmission. These vehicles were brought to India exclusively for the Nissan CARnival. Let's take a little closer look at what India can expect:
Story first published: Wednesday, March 25, 2015, 11:40 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark