இந்தியாவில் விற்பனைக்கு வரும் நிசான் பேட்ரோல் சொகுசு எஸ்யூவி!

Written By:

இந்தியாவில் நிசான் பேட்ரோல் சொகுசு எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டொயோட்டா லேண்ட்க்ரூஸருக்கு போட்டியாக வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவியின் சிறப்பம்சங்கள் மற்றும் எதிர்பார்க்கும் விலை பற்றிய முக்கியத் தகவல்கள் ஸ்லைடரில் காத்திருக்கின்றன.

வளைகுடா நாடுகளில் பிரபலம்

வளைகுடா நாடுகளில் பிரபலம்

வளைகுடா நாடுகளில் 'டெசர்ட் சஃபாரி' என்ற பாலைவன சாகச பயணங்களில் இந்த எஸ்யூவி அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. நம்மூரிலிருந்து டெசர்ட் சஃபாரி சென்ற பலரும் இந்த எஸ்யூவியில் பயணித்த அல்லது ஓட்டிய அனுபவத்தை பெற்றிருக்க வாய்ப்புள்ளது.

இறக்குமதி மாடல்

இறக்குமதி மாடல்

நிசான் பேட்ரோல் எஸ்யூவி இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த சொகுசு எஸ்யூவியில் 400 எச்பி பவரையும், 559 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்கும் வல்லமை கொண்ட 5.6 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

கியர்பாக்ஸ்

கியர்பாக்ஸ்

நிசான் பேட்ரோல் எஸ்யூவி மூன்று விதமான கியர்பாக்ஸ் கொண்டதாக அயல்நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. மேனுவல் மோடு தொழில்நுட்பத்துடன் கூடிய 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் மேனுவல் மோடு கொண்ட 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.

 ஆஃப் ரோடு எஸ்யூவி

ஆஃப் ரோடு எஸ்யூவி

வெளிநாடுகளில் வழங்கப்படும் அனைத்து ஆஃப் ரோடு தொழில்நுட்ப வசதிகளும் இந்தியாவிலும் வழங்கப்படும். ஃபுல் டைம் 4 வீல் டிரைவ் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், 18 இன்ச் அலாய் வீல்கள், இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் ஆகியவை நிரந்தர அம்சங்களாக இருக்கும். ஆட்டோமேட்டிக் ஹசார்டு லைட்டிங் சிஸ்டம் உள்பட இந்த பாதுகாப்பு அம்சங்கள் பட்டியலில் நீண்டு கொண்டே செல்லும். 3,500 கிலோ இழுவை திறன் கொண்டது.

இன்டிரியர்

இன்டிரியர்

நிசான் சொகுசு பிராண்டான இன்ஃபினிட்டியின் க்யூஎக்ஸ்80 சொகுசு காரின் ஏராளமான பாகங்களை இந்த எஸ்யூவி பங்கிட்டுள்ளது. எனவே, மிகச்சிறந்த பிரிமியம் இன்டிரியர் வடிவமைப்பையும், வசதிகளையும் கொண்டதாக இருக்கும்.

விலை

விலை

இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருப்பதால் ரூ.1 கோடி விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

நிசானின் நம்பிக்கை

நிசானின் நம்பிக்கை

நிசான் இதுவரை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்த மாடல்கள் பெரிய வெற்றியை பதிவு செய்யவில்லை. இருப்பினும், இந்த எஸ்யூவி மிகச்சிறந்த ஆஃப்ரோடு தொழில்நுட்பங்கள் மற்றும் சொகுசு வசதிகளை வழங்கும் மாடல் என்பதால் நிசான் நம்பிக்கையுடன் இந்த முடிவை எடுத்திருப்பதாக கருதப்படுகிறது.

 
English summary
Japanese car maker Nissan is all set to bring in its full-sized SUV Patrol to go against the Toyota Land Cruiser. 
Story first published: Friday, March 20, 2015, 12:22 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark