புதிய தலைமுறை நிசான் மைக்ரா கான்செப்ட் மாடலின் டீசர்!

Written By:

அடுத்த மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில் நிசான் ஸ்வே என்ற புதிய கான்செப்ட் கார் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய நிசான் ஸ்வே கான்செப்ட் காரின் டீசர் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த புதிய கான்செப்ட் மாடலின் அடிப்படையில்தான் புதிய தலைமுறை நிசான் மைக்ரா கார் வடிவமைக்கப்பட உள்ளதால், இந்த டீசர் அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

New Nissan Sway Concept
  

மேலும், எதிர்காலத்தில் வெளியிடப்படும் புதிய ஹேட்ச்பேக் கார்களின் டிசைன் கொள்கையில் மாற்றங்களை செய்ய இருப்பதாக நிசான் சமீபத்தில் தெரிவித்திருந்ததும் இந்த கான்செப்ட் மாடலின் டிசைன் மீது அதிக கவனம் செலுத்த தூண்டியிருக்கிறது.

அதேவேளை, நிசான் நிறுவனத்தின் ட்ரேட்மார்க் க்ரில் அமைப்பு இந்த காரிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. எல்இடி ஹெட்லைட்டுகளும், பகல்நேர விளக்குகளும் சிறப்பான தோற்றத்தை காருக்கு தருகிறது. எதிர்கால நிசான் மாடல்களின் புதிய டிசைன் கொள்கைக்கு இது ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Nissan will reveal the Sway Concept at the 2015 Geneva Motor Show, offering the first glimpse of the forthcoming all-new European-built 2016 Micra.
Story first published: Wednesday, February 25, 2015, 9:35 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark