கார்களுக்கான 2 புதிய சூப்பர் கம்ப்யூட்டர் சாதனங்களை வெளியிட்ட என்விடியா!

Posted By:

கார்களுக்கான இரண்டு புதிய செயல்திறன் மிக்க கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களை என்விடியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சிஎன்எஸ் தொழில்நுட்ப கண்காட்சியில் இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட சாதனங்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. இந்த புதிய தொழில்நுட்பங்கள் எதிர்கால கார்களின் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் மிக முக்கிய பங்காற்றும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

என்விடியா டிரைவ் சிஎக்ஸ் மற்றும் என்விடியா டிரைவ் பிஎக்ஸ் ஆகிய இரண்டு பெயர்களில் இந்த புதிய சூப்பர் கம்ப்யூட்டர் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. என்விடியா டிரைவ் பிஎக்ஸ் சாதனம் டிரைவரில்லா கார்களின் தொழில்நுட்பத்திற்கு ஏற்றதாகவும், டிரைவ் சிஎக்ஸ் காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆன்போர்டு சிஸ்டத்திற்கான தகவல்களை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Nvidia Processor
 

இது சூப்பர் கம்ப்யூட்டர்களின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால், தற்போதைய கார் தகவல்தொழில்நுட்ப வசதிகளைவிட பன்மடங்கு கூடுதல் செயல்திறன் மிக்கதாக இருக்கும். டிரைவ் பிஎக்ஸ் சாதனத்தில் இரண்டு டெக்ரா எக்ஸ்1 சூப்பர்சிப்புகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும், 12 உயர் துல்லிய கேமராக்களுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. பார்க்கிங் செய்வதற்கான காலி இடத்தை கண்டறிந்து தானியங்கி முறையில் பார்க்கிங் செய்வதற்கு இந்த சாதனம் உதவும். மேலும், ஸ்மார்ட்போன் கட்டளை மூலம் காரை பார்க்கிங் பகுதியிலிருந்து தானியங்கி முறையில், நுழைவாயிலுக்கு வரவழைக்க முடியும்.

அடுத்து டிரைவ் சிஎக்ஸ் காக்பிட் கம்ப்யூட்டர் மூலம், நேவிகேஷன், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், பொழுதுபோக்கு வசதிகளை பெற முடியும். இந்த சாதனத்தில் 360 டிகிரி கோணத்தில் காரை சுற்றிலும் பார்க்கும் வசதி இருக்கிறது. இதன்மூலம், பிளைன்ட் ஸ்பாட்டை திரை மூலம் பார்க்க முடியும். இந்த சாதனத்தில் டெக்ரா எக்ஸ்1 அல்லது கே1 பிராசசர்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டிலிருந்து இந்த இரு புதிய தொழில்நுட்பங்களும் கிடைக்கும் என்று என்விடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
Transporting the world closer to a future of auto-piloted cars that see and detect the world around them, NVIDIA today introduced NVIDIA DRIVE automotive computers - equipped with powerful capabilities for computer vision, deep learning and advanced cockpit visualization.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark