பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை குறைகிறது?

By Saravana

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வரை குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் இந்திய ரூபாயின் பணமாற்று மதிப்பை பொறுத்து பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைத்து வருகின்றன.

Diesel

இந்தநிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் காணப்படும் சுணக்கத்தை வைத்து பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.4.17 வரையிலும், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3.99 வரையிலும் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக, எண்ணெய் நிறுவன அதிகாரிகளை செய்தியாளர்கள் தொடர்பு கேட்டதற்கு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். ஆனால், விலை குறையும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Most Read Articles
English summary
Considering current fortnight average free on board (FOB) prices of diesel ($62.13 per barrel) and petrol ($70.48 per barrel) and currency average of rupee versus US dollar of 63.75, diesel over recovery comes to Rs 3.99 per litre, and petrol over recovery comes to Rs 4.17 per litre.
Story first published: Friday, July 31, 2015, 15:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X