கச்சா எண்ணெய் விலை உயர்வு: பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது!

Posted By:

கடந்த சில மாதங்களாக இறங்கு முகத்தில் இருந்த கச்சா எண்ணெய் விலை ஏறத் துவங்கியுள்ளதையடுத்து, பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

டெல்லியில், பெட்ரோல் விலை 82 பைசாவும், டீசல் விலை 61 பைசாவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.42 வரையிலும், டீசல் விலை ரூ.2.25 வரையிலும் குறைக்கப்பட்டது.

Petrol Outlet
 

இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்தநிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பின்னர் முதல்முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகள் மற்றும் புதிய வாகனங்களை வாங்குவோர் மத்தியில் சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது.

இந்த விலை உயர்வு அறிவிப்பு மூலம், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 97 பைசாவும் டீசல் விலை 67 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 58.88 ரூபாய்க்கு விற்கப்பட்ட பெட்ரோல், ரூ.59.85க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.48.91க்கு விற்பனை செய்யப்பட்ட டீசல் விலை தற்போது 49.58 ஆக உயர்ந்துள்ளது.

English summary
Just when consumers started bearing a smile on their face, reality slaps back. Petrol and diesel prices have increased by 82 and 61 paise per litre respectively.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark