பினின்ஃபரினா கார் டிசைன் நிறுவனத்தை கையகப்படுத்தியது மஹிந்திரா!

Written By:

உலகப் புகழ்பெற்ற இத்தாலிய கார் டிசைன் நிறுவனமான பினின்ஃபரினாவை இந்தியாவின் மஹிந்திரா குழுமம் கையகப்படுத்தியிருக்கிறது. 28 மில்லியன் டாலர் மதிப்பிலான பினின்ஃபரினா நிறுவனத்தின் பங்குகளை மஹிந்திரா குழுமம் வாங்கியிருக்கிறது.

இதன்மூலமாக, பினின்ஃபரினா நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் மஹிந்திரா குழுமத்தின் வசம் கைமாறியிருக்கிறது. நிதி நெருக்கடிகளால் சிக்கித் தவித்து வந்த பினின்ஃபரினாவுக்கு தற்போது மஹிந்திரா குழுமம் புத்துயிர் கொடுத்திருக்கிறது.

மஹிந்திரா - பினின்ஃபரினா
 

அதேநேரத்தில், மஹிந்திரா நிர்வாகத்தின் கீழ் பினின்ஃபரினா வந்துவிட்ட போதிலும், பழையபடி தனி நிறுவனமாகவே பினின்ஃபரினா செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனத்தின் வாரியத் தலைவராக இருந்து வரும் பாவ்லோ பினின்ஃபரினா தனது பதவியை தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

பராம்பரியம் மிக்க பினின்ஃபரினா நிறுவனம் கார் டிசைன் செய்வதில் கைதேர்ந்த நிறுவனம். ஆல்ஃபா ரோமியோ, ஃபெராரி, பீஜோ உள்பட பல நிறுவனங்களின் வெற்றிகரமான கார் மாடல்களின் டிசைனில் பினின்ஃபரினா முக்கிய பங்காற்றியிருக்கிறது.

இந்த நிலையில், மஹிந்திரா நிறுவனத்தின் எதிர்கால கார் மாடல்களின் டிசைனில் பினின்ஃபரினாவின் பங்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். தென்கொரியாவின் சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து, தற்போது இத்தாலியை சேர்ந்த பினின்ஃபரினாவையும் மஹிந்திரா குழுமம் கையகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
For months, now rumours have been doing the round of Mahindra acquiring Pininfarina. The deal has now been confirmed, Pininfarina is now part of Mahindra which has been bought for $28 million. Mahindra now owns 76 percent stake within Pininfarina.
Story first published: Tuesday, December 15, 2015, 10:05 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark