பல்ஸ், ஸ்காலா கார்களின் உற்பத்தியை ரெனோ நிறுத்தி ரொம்ப நாளாச்சாமே...!!

Written By:

விற்பனை சரியில்லாததையடுத்து, ரெனோ நிறுவனத்தின் பல்ஸ் மற்றும் ஸ்காலா கார்களின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் கடைசியாக 183 ஸ்காலா செடான் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கடைசியாக 59 பல்ஸ் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பான சியாம் வெளியிட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

Reno Pulse
 

அதேவேளை, இந்த இரு மாடல்களின் விற்பனையை நிரந்தரமாக நிறுத்தும் எண்ணம் இல்லை என்று ரெனோ நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். அடுத்த சில மாதங்களில் இந்த இரு கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை களமிறக்க ரெனோ திட்டமிட்டிருப்பதாகவும், இதற்காக இருப்பு இருக்கும் கார்களை விற்று காலி செய்வதற்காக உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

ரெனோ நிறுவனத்தின் பல்ஸ் மற்றும் ஸ்காலா கார்கள் நிசான் நிறுவனத்தின் மைக்ரா மற்றும் சன்னி கார்களின் ரீபேட்ஜ் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டவை. மைக்ரா, சன்னி கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் ஏற்கனவே வந்துவிட்ட நிலையில், தற்போது ரெனோ நிறுவனமும் பல்ஸ், ஸ்காலா கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

English summary
Poor Sales: Renault stops production of Pulse, Scala 
Story first published: Tuesday, February 24, 2015, 16:59 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark