மசானைவிட விலை குறைவான க்ராஸ்ஓவரை வடிவமைக்கும் போர்ஷே!

Written By:

போர்ஷே நிறுவனம் அதன் மூன்றாவது கிராஸ்ஓவர் மாடலை வடிவமைக்கும் திட்டத்தில் உள்ளது. போர்ஷேவின் விலை குறைவான க்ராஸ்ஓவர் மாடலாக வருவதால் அதிக ஆவலைத் தூண்டியிருக்கிறது.

போர்ஷே கார் உற்பத்தி நிறுவனம் வெறும் 911 கார்களை வைத்து கொண்டிருந்த காலங்கள் போய்விட்டது. தொடர்ந்து புதிய க்ராஸ்ஓவர் ரக கார்களை உற்பத்தி செய்ய போர்ஷே முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

 புதிய முயற்சிகள்;

புதிய முயற்சிகள்;

ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரத்தை மையமாக கொண்டு இயங்கும் போர்ஷே, மசான் மற்றும் கேயென் கிராஸ் ஓவர்களை உற்பத்தி செய்து வந்தது. இப்போது, இன்னும் சிறிய வடிவில், கூடுதல் ஆற்றல்மிக்க க்ராஸ்ஓவரை உருவாக்க போர்ஷே திட்டமிட்டு வருகிறது.

எப்போது வெளிவரும்?

எப்போது வெளிவரும்?

தற்போது, வடிவமைப்பு நிலையில் உள்ள போர்ஷே பேபி கிராஸ்ஓவர் என அழைக்கப்படும் இந்த புதிய காரானது, இந்த தசாப்தத்தின் முடிவுக்குள் வெளியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கான்செப்ட் காரின் உருமாதிரி அடுத்த சில ஆண்டுகளில் வெளியாகிவிடும் என தெரிகிறது.

வடிவமைப்பு;

வடிவமைப்பு;

திட்ட நிலையில் உள்ள இந்த கார் மசான் எஸ்யூவியை சிறியதாக இருக்கும். முன்னதாக, வெளியிடப்பட்ட கார்களை காட்டிலும், இது பலம் வாய்ந்ததாக இருக்க உள்ளது. சாய்வாக உள்ள கூரை அமைப்பை கொண்டிருக்க வாய்ப்புகள் உள்ளது.

தொழில்நுட்பம்;

தொழில்நுட்பம்;

புதிய போர்ஷே க்ராஸ்ஓவரில் ரியர்-வீல் ட்ரைவ் சிஸ்டம் நிரந்தர அம்சமாக இடம்பெற்றிருக்கும். எனினும், இதன் விலை உயர்ந்த மாடல்கள் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் வர உள்ளது. இந்த புதிய கார் வடிவமைக்கப்பட இருக்கும் தளம் குறித்து, எந்தவிதமான தெளிவான தகவல்களும் வெளியாகாமல் உள்ளது. இதற்காக பிரத்யேகமாக வடிவமைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

அதனால், ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் இதர பிரிமியம் மாடல்களில் இருந்து டிசைன் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் ஏற்றுகொள்ளப்படலாம். இந்த புதிய காரானது, நான்கு-சிலிண்டர் இஞ்ஜினுடனும், ட்யூவல்-கிளட்ச் கியர்பாக்ஸுடன் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

 விலை;

விலை;

விலையை பற்றி தற்போது பேசுவது சரியானதல்ல. ஆனால், இந்த புதிய போர்ஷே பேபி கார், மசான் காரை காட்டிலும் விலை குறைவாகவே இருக்கும் என தெரிகிறது. போர்ஷே மசான் காரின் எஸ் மற்றும் டீசல் வேரியண்ட்கள், தற்போது ஜெர்மனியில் 60,000 யூரோ-விற்கு சற்று குறைவான விலையில் கிடைக்கிறது. இதைவிட குறைவான விலையில் புதிய க்ராஸ்ஓவர் மாடலை போர்ஷே நிலைநிறுத்த இருப்பதால் அதிக ஆவல் எழுந்துள்ளது.

வருங்கால வரவுகள்;

வருங்கால வரவுகள்;

இந்த புதிய போர்ஷே கார் மட்டுமின்றி, மேலும் பல புதிய கார்களை அறிமுகம் செய்ய போர்ஷே திட்டமிட்டு வருகிறது. வருங்காலத்தில், பனமெரா காரின் அடிப்படையிலான புதிய மினி ஸ்போர்ட்ஸ் காரும் வெளியாகலாம். இந்த சிறிய பனமெரா கார், கடந்த மாதம் நடந்த ஃபிராங்க்பர்ட் மோட்டார் ஷோ-வில் காண்பிக்கபட்ட மிஷன் ஈ கான்செப்ட், எனப்படும் முழுமையான எலக்ட்ரிக் எடிஷன் வடிவத்தில் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.

 
English summary
Porsche is planning for smaller crossover to slot below Macan. This new baby Porsche crossover is expected to be released before the end of this Decade.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark